ஒருவேளை உங்களுடைய எம்பிளாயீஸ் பிராவிடன்ட் ஃபண்ட் அக்கவுண்டில் உள்ள சிறிய அளவுத் தொகையை வித்ட்ரா செய்வதற்கு யோசித்து வருகிறீர்கள் என்றால் அதனை மிக எளிமையாக ஆன்லைனில் செய்துவிடலாம். மருத்துவ செலவுகள், உயர் கல்வி, திருமணம் அல்லது வீட்டை புதுப்பிப்பது போன்ற எந்த ஒரு பணத் தேவைக்காகவும் நீங்கள் எந்த ஒரு சிரமமும் இல்லாமல், வீட்டை விட்டு வெளியேறாமல், உடனடியாக EPF ஆன்லைன் பார்ஷில் வித்டிராயல் அம்சம் மூலமாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அதற்கான படிப்படியான செயல்முறையை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

விளம்பரம்

KYC

இந்த செயல்முறையை ஆரம்பிப்பதற்கு முன்பு உங்களுடைய யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN) ஆக்டிவாக இருக்கிறதா என்பதையும், அது உங்களுடைய ஆதார், PAN மற்றும் பேங்க் அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதை ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் ஆன்லைன் EPF ட்ரான்சாக்ஷன்களை உங்களுடைய அக்கவுண்டில் இருந்து செய்வதற்கு இது மிகவும் அவசியம்.

Also Read: 
Gold Rate: மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

UAN போர்ட்டலில் லாகின் செய்யவும்

அதிகாரப்பூர்வ UAN போர்ட்டலுக்கு சென்று உங்களுடைய UAN மற்றும் பாஸ்வோர்ட் பயன்படுத்தி லாகின் செய்யவும். இதற்கு நீங்கள் சைன் இன் என்பதை கிளிக் செய்வதற்கு முன்பு கேப்சாவை என்டர் செய்ய வேண்டும். இதன் பிறகு உங்களுடைய அக்கவுண்டின் டேஷ் போர்டுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

விளம்பரம்

KYC விவரங்கள்

லாகின் செய்த பிறகு மேனேஜ் டேபில் நுழைந்து KYC என்பதை தேர்வு செய்யவும். இந்த பிரிவில் உங்களுடைய ஆதார், PAN மற்றும் வங்கி விவரங்கள் போன்ற அனைத்து இணைக்கப்பட்டுள்ள டாக்குமென்ட்கள் டிஸ்ப்ளே செய்யப்படும். இதில் உள்ள விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துங்கள்.

கிளைமை துவங்க

இப்போது ‘ஆன்லைன் சர்வீசஸ்’ டேபிற்கு சென்று டிராப்-டவுன் மெனுவில் கிளைம் ஃபார்ம் 31, 19, 10C மற்றும் 10D-ஐ தேர்வு செய்யவும். இப்போது உங்களுடைய தனி நபர் விவரங்கள், KYC நிலை மற்றும் சர்வீஸ் வரலாறு போன்ற விவரங்கள் காண்பிக்கப்படும். அனைத்து விவரங்களையும் ஒரு முறைக்கு இருமுறை சரிபார்க்கவும். பின்னர் உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் நம்பரை என்டர் செய்து ‘வெரிஃபை’ என்பதை கிளிக் செய்யுங்கள். மேலும் தொடர ‘யெஸ்’ என்பதை தட்டவும்.

விளம்பரம்

வித்டிராயல் வகை

இப்போது வித்டிராயல் செயல்முறையை துவங்குவதற்கு “ப்ரொசீடு ஃபார் ஆன்லைன் கிளைம்” என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் பாதி அளவு பணத்தை வித்டிரா செய்வதற்கு டிராப்டவுன் மெனுவில் உள்ள “ஐ வான்ட் டு அப்ளை ஃபார்” என்பதை தேர்வு செய்து “PF அட்வான்ஸ் பார்ம் 31” என்பதை கிளிக் செய்யுங்கள்.

இதையும் படிக்க:
டெபாசிட் இன்சூரன்ஸ் கிளைம் நிலையை ஈஸியா செக் பண்ண “தாவா சூசக் டிராக்கர்”

வித்டிராயல் விவரங்கள்

இங்கு நீங்கள் பணத்தை வித்டிரா செய்வதற்கான குறிப்பிட்ட காரணம், தேவைப்படும் தொகை மற்றும் உங்களுடைய தற்போதைய வீட்டு முகவரியை என்டர் செய்ய வேண்டும். நீங்கள் தேர்வு செய்துள்ள காரணத்தின் அடிப்படையில் அதனை ஆதரிக்கும் வகையிலான மருத்துவச் சான்றிதழ் அல்லது இன்வாய்ஸ் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

விளம்பரம்

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

படிவத்தை நிரப்பிய பிறகு அனைத்து விபரங்களையும் ஒருமுறை ஆய்வு செய்துவிட்டு, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். உங்களுடைய கிளைமை நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் ஆய்வு செய்து, அதனை அங்கீகரிக்கும்.

Also Read: 
2025-ம் ஆண்டில் தங்கம் விலை மேலும் உயருமா? எத்தனை சதவிகிதம் உயர வாய்ப்புள்ளது? – நிபுணர்கள் கணிப்பு என்ன?

கிளைம் ஸ்டேட்டஸ் உங்களுடைய கிளைமை சமர்ப்பித்த பிறகு அதன் நிலையை பற்றி தெரிந்து கொள்வதற்கு “ஆன்லைன் சர்வீசஸ்” டேபில் உள்ள “ட்ராக் கிளைம் ஸ்டேட்டஸ்” என்பதை தேர்வு செய்து பார்க்கலாம்.

.



Source link