பண்டிகை காலத்தை முன்னிட்டு பிரபல இ-காமர்ஸ் பிளாட்ஃபார்மான அமேசான், Great Indian Festival 2024 சிறப்பு விற்பனையை செப்டம்பர் 27ஆம் தேதி துவங்கியது. இந்த ஸ்பெஷல் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தின் லேப்டாப்ஸ்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அமேசானின் சிறப்பு விற்பனையில் லேப்டாப்ஸ்களுக்கு சுமார் 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2024 ஸ்பெஷல் விற்பனையில் தள்ளுபடிகள், பேங்க் ஆஃபர்கள் மற்றும் பிற பெனிஃபிட்ஸ்களை பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் ரூ.53,000க்கு கீழ் ஆப்பிள் நிறுவனத்தின் பிரபல லேப்டாப்பான MacBook Air M1(2020)-ஐ வாங்க முடியும். அதே போல அமேசானின் சிறப்பு விற்பனைக்காக வங்கிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது. யூஸர்கள் எஸ்பிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தி செய்யும் பரிவர்த்தனைகளில் 10 சதவீதம் வரை கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம்.
Apple MacBook Air (M1, 2020)-க்கு அமேசானில் வழங்கப்படும் சலுகை:
முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் (எம்1, 2020) இந்தியாவில் ரூ.92,900-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, பின்னர் இதன் ரூ.99,900-ஆக உயர்த்தப்பட்டது. எனினும் அமேசானின் ஸ்பெஷல் விற்பனையின்போது இந்த ஆப்பிள் லேப்டாப்பை தள்ளுபடியுடன் ரூ.55,990-க்கு வாங்க முடியும். கூடுதலாக யூஸர்கள் ரூ.3,000 வரையிலான தள்ளுபடியை பெற பேங்க் ஆஃபர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் மேக்புக் ஏர் (எம்1, 2020) விலையை ரூ.52,990ஆக குறைத்துக் கொள்ளலாம். தள்ளுபடிகள் மற்றும் பேங்க் ஆஃபர்களை தவிர ஆப்பிள் லேப்டாப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளையும் யூஸர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மேக்புக் ஏர் (எம்1, 2020) ஸ்பெசிஃபிகேஷன்கள்:
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ப்ரீமியம் லேப்டாப் 2560×1600 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் 400nits பீக் பிரைட்னஸுடன் கூடிய 13.3-இன்ச் LED-பேக்லிட் IPS டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த லேப்டாப்பின் பேஸ் வேரியன்ட் ஆப்பிள் நிறுவனத்தின் M1 சிப்செட் மூலம் 8-கோர் CPU மற்றும் 7-கோர் GPU உடன் இயக்கப்படுகிறது. இது 8GB RAM மற்றும் 256GB SSD ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:
OPPO India தீபாவளி சேல்ஸ்… ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி ஆஃபர் அறிவிப்பு… இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
மேலும் சார்ஜிங், டிஸ்ப்ளே போர்ட் மற்றும் டேட்டா ட்ரான்ஸ்ஃபரை சப்போர்ட் செய்யும் 2 தண்டர்போல்ட் 4 போர்ட்ஸ்கள் இதில் உள்ளன. இந்த லேப்டாப் டால்பி அட்மோஸிற்கான சப்போர்ட்டுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் பெறுகிறது மற்றும் 720p ஃபேஸ்டைம் HD கேமரா உள்ளது. கனெக்டிவிட்டிக்காக இந்த லேப்டாப்பில் Wi-Fi 6 மற்றும் ப்ளூடூத் 5.0 உள்ளிட்ட ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த லேப்டாப்பின் ஹை வேரியன்ட்ஸ்களை வாங்க விரும்புவோர் 16GB ரேம் மற்றும் 2TB வரையிலான ஸ்டோரேஜூடன் அதை கான்ஃபிகர் செய்து கொள்ளலாம்.
.