முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது உலக புகழ் பெற்றதாகும். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
மேலும், இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்களும் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான நடிகை ரம்யா பாண்டியன் தனது காதல் கணவர் லோவல் தவானுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.
கோவிலுக்குள் சென்ற அவர் திருச்செந்தூர் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, பெருமாள், தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினார். கோவிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த நடிகை ரம்யா பாண்டியனுடன் பக்தர்கள், பொதுமக்கள் நின்று புகைப்படம் எடுத்தும், செஃல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: படத்தை பார்த்தால் மட்டும் போதாது… நடிகர் சூரி சொன்ன அட்வைஸ் யாருக்கு தெரியுமா..?
தொடர்ந்து அங்கிருந்த பக்தர்களுக்குச் சர்க்கரைப் பொங்கல் வழங்கினார். அதில் ஒரு குழந்தைக்கு வாயில் இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார். தொடர்ந்து கோவிலிலிருந்து வெளியே வந்த அவர் கோவில் பகுதியில் இருந்த கடைக்குள் சென்று பஞ்சாமிர்தம் வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.