சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தனது பணியை ஜெய் ஷா தொடங்கியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக இருந்த ஜெய் ஷா, கடந்த ஆகஸ்டில் ஐசிசி தலைவர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். வேறு யாரும் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்காத நிலையில் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஆகஸ்டில் தேர்வு செய்யப்பட்டாலும், தலைவராக இருந்த கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் நவம்பர் இறுதியுடன் நிறைவுற்றது.

இதனைத் தொடர்ந்து, ஐசிசி தலைவராக ஜெய் ஷா, தனது பொறுப்புகளை டிசம்பர் ஒன்றாம் தேதியான ஞாயிற்றுக்கிழமை ஏற்றுக்கொண்டார்.

விளம்பரம்

36 வயதிலேயே ஐசிசி தலைவர் பதவியைப் பெற்ற இளம் நபர் என்ற பெருமையை ஜெய் ஷா பெற்றுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பிசிசிஐ செயலாளராக இருந்த ஜெய் ஷா, தற்போது ஐசிசியின் தலைவராகியுள்ளார்.

ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், சஷாங்க் மனோகர், என்.சீனிவாசன் வரிசையில் ஐசிசி தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஜெய் ஷா பதவியேற்றுக் கொண்டார்.

.



Source link