மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்தது. இதே குரூப்பில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம்பெற்றிருந்தன.

இந்திய அணி, இலங்கை மற்றும் பாகிஸ்தானை வீழ்த்திய நிலையில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து தோற்றால் ரன்ரேட் அடிப்படையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருந்தது.

விளம்பரம்

எனினும், துபாயில் நேற்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, குரூப்பில் 2வது இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

Also Read |
டி.எஸ்.பி. முகமது சிராஜ் மட்டுமல்ல… அரசு பொறுப்பில் இருக்கும் 5 கிரிக்கெட் வீரர்கள் யார் தெரியுமா?

முதலில் பேட் செய்த நியூசிலாந்து 110 ரன்கள் எடுக்க, இரண்டாவது பேட் செய்த பாகிஸ்தான் 56 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்க, நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.

இதனால், உலகக் கோப்பை தொடரில் 4 புள்ளிகளை மட்டுமே பெற்ற இந்திய அணி, தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

விளம்பரம்

.



Source link