தங்களுடைய வாழ்நாள் சேமிப்புகளை டெபாசிட்களில் முதலீடு செய்யும் நபர்கள் முழு நம்பிக்கையோடுதான் அவற்றை செய்கின்றனர். ஆனால் பல கமர்ஷியல், நடுத்தர, தனியார் மற்றும் கூட்டுறவு வங்கி நிறுவனங்கள் தோல்வியுற்ற காரணங்களால் இதுபோன்ற டெபாசிட்டர்களை கைவிட்டு விடுகின்றனர். இந்த டெபாசிட்டர்களில் பெரும்பாலானவர்கள் சீனியர் சிட்டிசன்களாக உள்ளனர். எனினும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் சப்சிடையரி டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரன்டி கார்ப்பரேஷன் (DICGC) ரீடைல் டெபாசிட்டர்களாக இருப்பவர்களுக்கு 5 லட்சம் வரையிலான காப்பீடை வழங்குகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் DICGC தாவா சூசக் என்ற ஆன்லைன் வசதியை ரீடைல் டெபாசிட்டர்களுக்காக அறிமுகப்படுத்தியது. இதனை பயன்படுத்தி அவர்கள் தங்களுடைய இன்சூரன்ஸ் கிளைம்களை கண்காணிக்கலாம்.
Also Read:
Gold Rate: மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய ரேட் என்ன தெரியுமா?
உங்களுடைய வங்கி டெபாசிட் இன்சூரன்ஸ் கிளைம் நிலையை இந்த கருவியை பயன்படுத்தி எப்படி சரிபார்ப்பது என்பதை பார்க்கலாம்.
அனைத்து வங்கிகளில் செய்யப்படும் டெபாசிட்கள் தோல்வியுற்ற வங்கிகள் மற்றும் அடைமானத்தில் உள்ளவை உட்பட அனைத்திற்கும் 5 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகை இதன் மூலமாக வழங்கப்படுகிறது. டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரன்டி கார்ப்பரேஷன் விதி, 1967இன் படி இதுபோன்ற டெபாசிட்டர்கள் 90 நாட்களுக்குள் தங்களுடைய கிளைம்களைப் பெறுவார்கள். மேலும் அவர்களுடைய கிளைம்களின் நிலை என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு தற்போது தாவா சூசக் டிராக்கரை பயன்படுத்தலாம்.
இதற்கு நீங்கள் DICGC-இன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்கு (www.dicgc.org.in) சென்று ஹோம் பேஜில் உள்ள டிராக்கருக்கு (https://dicgc.org.in/claimstatus/Deposit) செல்ல வேண்டும். பின்னர் டிராப் டவுன் மெனுவில் இருந்து வங்கியை தேர்வு செய்து ஸ்டேட்டஸை தெரிந்து கொள்வதற்கு உங்களுடைய மொபைல் நம்பரை என்டர் செய்ய வேண்டும். தற்போதைய நிலையில் டிராப்டோமெனுவில் ஆறு கூட்டுறவு வங்கிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அவற்றில் தேசிய நகர்ப்புற கூட்டுறவு வங்கி லிமிடெட் (பிரதாப்கர்), சர்வோதயா கூட்டுறவு வங்கி, அமநாத் கூட்டுறவு வங்கி, கோனர்க் நகர்ப்புற கூட்டுறவு வங்கி மற்றும் ஷிர்பூர் வணிகர்கள் கூட்டுறவு வங்கி போன்றவை அடங்கும். DICGC விதியின் படி, சேமிப்புகள், ஃபிக்சட் டெபாசிட், கரண்ட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட் போன்ற அனைத்து விதமான ரீடைல் டெபாசிட்களுக்கும் இந்த இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்கப்படும். எனினும் வெளிநாட்டு அரசுகளின் டெபாசிட்களுக்கு இதில் காப்பீடு கோர முடியாது.
இதையும் படிக்க:
ஜிம்கள், நீச்சல் குளத்துடன் மும்பையில் ரூ.5,000 கோடி மதிப்புள்ள வீடு; உரிமையாளர் யார் தெரியுமா?
மேலும், மத்திய அல்லது மாநில அரசுகள், இடைநிலை-வங்கி டெபாசிட் மற்றும் இந்தியாவிற்கு வெளியே செய்யப்படும் எந்த ஒரு டெபாசிட்டிற்கும் இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு பெற முடியாது. இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்கப்படும் வங்கிகளின் பட்டியலில் கமர்ஷியல் மற்றும் கூட்டுறவு வங்கிகள் போன்றவை அடங்கும். ஆனால் கூட்டுறவு சொசைட்டிகள் இதன் மூலமாக பலன் பெற முடியாது. வங்கிகளுக்கு டெபாசிட் இன்சூரன்ஸ் திட்டம் கட்டாயம். இந்த திட்டத்தில் பணத்தை டெபாசிட் செய்பவர்கள் பிரீமியம் தொகையை செலுத்த தேவையில்லை. மாறாக வங்கிகள் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையை செலுத்த வேண்டும்.
இதையும் படிக்க:
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2024: இனி வீட்டுக் கடன் வாங்க வருமான டாக்குமென்ட்கள் தேவையில்லை!!!
ஒருவேளை உங்களுக்கு பல வங்கிகளில் டெபாசிட் இருந்தால் ஒவ்வொரு வங்கியிலும் உங்களுடைய இன்சூரன்ஸ் காப்பீடு லிமிட் என்பது ஒவ்வொரு வங்கியில் உள்ள டெபாசிட் கணக்கிற்கு தனித்தனியாக பொருந்தும். எனவே இன்சூரன்ஸ் மூலமாக முழு பலனை பெறுவதற்கு உங்களுடைய டெபாசிட்களை பல்வேறு வங்கிகளில் வைப்பது புத்திசாலித்தனமாக இருக்கும். அதே நேரத்தில் ஒரே வங்கியில் ஜாயின்ட் அக்கவுண்டுகளில் நீங்கள் பணத்தை டெபாசிட் செய்யலாம். மேலும் பல்வேறு உரிமை நிலைகள் உள்ள அக்கவுண்டுகளுக்கும் தனித்தனியாக காப்பீடு கோரலாம்.
.