மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதிக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை என வலுவான அணிகள் இடம்பெற்றுள்ள குரூப் ஏ பிரிவில் இந்தியா இடம்பெற்றது. இதில், பாகிஸ்தான், இலங்கை அணிகளை வீழ்த்திய இந்திய மகளிர் அணி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இதனால், 4 புள்ளிகளைப் பெற்ற இந்திய அணி, ரன்ரேட் அடிப்படையில் 2-ஆவது இடத்தில் உள்ளது.
ஆனால், 3 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள நியூசிலாந்து அணி 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும்.
Also Read |
கனமழை எதிரொலி: அனைவருக்கும் Work From Home… ஐடி நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய அட்வைஸ்!
நியூசிலாந்து அணி தோல்வியடைந்தால், இந்திய அணிக்கு வாய்ப்பு இருக்கிறது என்றபோதும், 53 ரன்களுக்கு அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்லவும் வாய்ப்புள்ளது.
இதனால், இன்றைய நியூசிலாந்து – பாகிஸ்தான் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
.