மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.

ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நடப்பாண்டு பொருளாதார அறிவியலுக்கான ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் பரிசு, டாரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ஏ. ராபின்சன் ஆகிய 3 பேருக்கு வழங்கப்படுவதாக ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் அறிவித்துள்ளது. நாடுகளுக்கு இடையே நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கான காரணிகள் குறித்த இவர்களின் ஆராய்ச்சிகளுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டாரன் அசெமோக்லு, துருக்கியை பூர்வீகமாக கொண்ட அமெரிக்கர். இதே போல், சைமன் ஜான்சன் பிரிட்டனை பூர்வீகமாக கொண்ட அமெரிக்கர். ஜேம்ஸ் ஏ. ராபின்சன் பிரிட்டனைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

இதையும் படிங்க : நிஹோன் ஹிடாங்க்யோ அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

முன்னதாக அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்புக்கு அறிவிக்கப்பட்டது. இந்த அமைப்பு அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அவர்களின் இறந்த நாளான டிசம்பர் 10 ஆம் தேதி, 8 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதியுடன் நோபல் பரிசு வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

.



Source link