சுதந்திரத்திற்கு பிறகு, கடந்த 10 ஆண்டுகால மோடியின் ஆட்சியில் தான் பணவீக்கம் குறைவாக உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
CNBC-TV18 குளோபல் லீடர்ஷிப் உச்சி மாநாட்டில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டார்.
Also Read:
Gold Rate: மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய ரேட் என்ன தெரியுமா?
அப்போது பேசிய அவர், “ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கடந்த முறை தங்கள் பரிந்துரைகளை வெளியிட்டபோது, இந்த மாதத்தில் பணவீக்கம் அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளனர். இது ராக்கெட் அறிவியல் அல்ல.
இங்கு என்ன நடக்கிறது, பணவீக்கம் ஏன் குறைகிறது, அதற்கான காரணங்கள் என்ன என்பதெல்லாம் எங்களுக்கு நன்றாக தெரியும். இதை நன்கு புரிந்துகொள்ளக்கூடிய புத்திசாலிகளாகத்தான் நாங்கள் உள்ளோம். மீண்டும் டிசம்பர் அல்லது ஜனவரியில் பணவீக்கம் குறையப்போகிறது” என்று கூறினார்.
இதையும் படிக்க:
இனி வீட்டுக் கடன் வாங்க வருமான டாக்குமென்ட்கள் தேவையில்லை!!!
தொடர்ந்து பேசிய அவர், “சுதந்திரத்திற்கு பிறகு, கடந்த 10 ஆண்டுகால மோடியின் ஆட்சியில் தான் பணவீக்கம் குறைவாக உள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை கண்டிப்பாக குறைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும் தொழிற்சாலைகள், வாடிக்கையாளர்களின் தேர்வுகள், தேவைகளை அறிந்து விலையை நிர்ணயிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அக்டோபரில், இந்தியாவின் பணவீக்கம் 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.1 சதவீதமாக உயர்ந்தது. மேலும் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பணவீக்கம் 6 சதவீத வரம்பை மீறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
.