தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு துறையில் உயர்த்தப்பட்ட கட்டணங்களால் அரசுக்கு ரூ. 1222 கோடி கூடுதல் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீடு, நிலம், திருமண பதிவு உள்பட பல்வேறு சேவைகளை பதிவு செய்வதற்கு பத்திரப்பதிவு துறை முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூல் செய்கிறது. இதில் 20 பிரிவுகளுக்கான கட்டணம் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் உயர்த்தப்படாமல் இருந்தது.
Also Read:
Gold Rate | தங்கம் விலை ரூ.7000-க்கும் குறைவாக சரசரவென சரிவு.. இன்றைய விலை என்ன தெரியுமா?
இந்த நிலையில், கடந்த மே மாதம் இந்த கட்டணத்தை தமிழ்நாடு பத்திரப் பதிவு துறை உயர்த்தியிருந்தது. அந்த வகையில், குறைந்த பட்ச முத்திரைத் தாள் கட்டணம் ரூ. 20 இல் இருந்து ரூ. 100, ரூ. 200, ரூ. 500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உறுதிமொழி ஆவணத்திற்கான முத்திரைத் தாள் கட்டணத்தை ரூ. 20 இல் இருந்து ரூ. 200 ஆக பத்திர பதிவுத்துறை அதிகரித்தது. இதேபோன்று நிறுவன குறைப்பாணைகள், பவர் பத்திரம், அடமான பத்திரம், கூட்டு ஒப்பந்தம், பாதுகாப்பு பத்திரைங்கள் உள்பட 20 பிரிவுகளின் முத்திரைத்தாள் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.
இவ்வாறு உயர்த்தப்பட்ட கட்டணங்களால் பத்திரப் பதிவு துறைக்கு கூடுதலாக ரூ. 1222 கோடி வரை வருவாய் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
வருவாய் மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்தத் தகவல்கள் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதாவது பத்திரப் பதிவு மூலம், 2023-2024 ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான வருவாய் ரூ. 10,511 கோடியாக இருந்தது. இதே காலகட்டத்தில் 2024-2025ல் வருவாய் ரூ. 11,733 கோடியாக அதிகரித்துள்ளது.
.