முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது உலகப் புகழ் பெற்றதாகும். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
மேலும் இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்களும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் நடிகர் சூரி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.
திருச்செந்தூர் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, பெருமாள், தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை நடிகர் சூரி தரிசனம் செய்தார். கோவிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த நடிகர் சூரியுடன் கோவில் கடற்கரை பணியாளர்கள், பாதுகாவலர்கள், ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் புகைப்படம் எடுத்தும், கை கொடுத்தும் மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: டூரிஸ்டுகளை கவரும் மாமியார் மருமகள் கிணறு… வியக்க வைக்கும் வித்தியாசமான கிணற்றின் கதை…
முன்னதாக கோவிலிலிருந்து வெளியே வந்த நடிகர் சூரியிடம் சிறுவன் ஒருவன் நீங்கள் நடித்த டான் திரைப்படத்தைப் பலமுறை பார்த்தாக கூறினார். அதற்கு பதிலளித்த நடிகர் சூரி, படத்தை மட்டும் பலமுறை பார்த்தால் போதாது. பாடத்தையும் பலமுறை படிக்க வேண்டும். தாய் தந்தை சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.