வங்கதேசத்திற்கு எதிராக ஐதராபாத்தில் நடைபெற்று வரும் 3 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் குவித்துள்ளது. சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு அணி எடுத்த 2 ஆவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில், கடைசி டி20 தற்போது ஐதராபாதின் உப்பால் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். அபிஷேக் 4 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமாருடன் இணைந்து சஞ்சு சாம்சன் வான வேடிக்கை காண்பித்தார்.

8 சிக்சர் மற்றும் 11 பவுண்டரியுடன் 47 பந்துகளில் 111 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் சஞ்சு சாம்சன். 40 பந்துகளில் சதம் அடித்த சஞ்சு சாம்சன், டி20 போட்டிகளில் குறைவான பந்துகளில் சதம் விளாசிய 2 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார். 35 பந்துகளில் சதம் விளாசிய ரோஹித் சர்மா முதல் இடத்தில் இருக்கிறார்.

விளம்பரம்

இதையும் படிங்க – நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு… துணை கேப்டனாக பும்ரா நியமனம்

சஞ்சு சாம்சனுக்கு போட்டியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 5 சிக்சர் 8 பவுண்டரியுடன் 75 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ரியான் பராக் 34 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 47 ரன்களும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 297 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.

விளம்பரம்

.



Source link