அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை புத்தளம் பெரிய பள்ளி மற்றும் சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து மத நல்லிணக்கத்தை முன்னிட்டு புத்தளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பெண்களுக்கான Ladies Napkins, சிறுவர்களுக்கான Kids diapers, வீட்டை சுத்தம் செய்ய Chlorine, கழிவறைகளை சுத்தம் செய்ய Toilet Cleaner போன்றவை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

புத்தளம் கொழும்பு வீதியில் அமைந்துள்ள பௌத்த மத்திய நிலையம், வெளிச் சுற்று பாதையில் அமைந்துள்ள விசுத்தாராம விகாரை, தில்லையடியில் இந்து கோவில், மணல் குன்று பொம்மக்கன் ஆலயம், செம்மாந்தலுவ ஆலயம் மற்றும் மணல்தீவு கிறிஸ்தவ ஆலயம் போன்ற இடங்களுக்கு சென்று அ.இ.ஜ.உ. புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் அல் மிஸ்பாஹி இதனை கையளித்தனர்.

இது தவிர புத்தளம் நகரின் 22 மஸ்ஜித் நிர்வாகிகளிடமும் இவ்வாறான உதவிப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன.

இதற்காக உதவி செய்த அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் சமூக சேவை உப குழுவின் தவிசாளர் அஷ்ஷெய்க் சனூஸ் அஷ்ரபி நன்றி தெரிவித்துள்ளார்.

The post வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் appeared first on Thinakaran.



Source link