கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்த மன்னம்பிட்டி – அரலஹங்வில வீதியின் 19/1 பாலத்துக்கு பதிலாக, இரண்டே நாட்களில் தற்காலிக இரும்புப் பாலம் நிர்மாணிக்கப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இப் பாலத்தை நிர்மாணிக்க 15 நாட்கள் ஆகுமென மதிப்பிடப்பட்டபோதிலும், கட்டுமானப் பணியில் துரிமாக செயற்பட்ட பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் இரவு பகலாக செயற்பட்டு, வெறும் இரண்டே நாட்களில் இந்த பாலத்தை நிர்மாணித்ததாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

The post இரண்டு நாட்களில் அமைத்த தற்காலிக இரும்பு பாலம் appeared first on Thinakaran.



Source link