டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 500+ ரன்கள் எடுத்தும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியடைந்த முதல் அணி என்ற மோசமான ரிக்கார்டை பாகிஸ்தான் அணி ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த 7 ஆம் தேதி தொடங்கி நேற்று முடிந்தது.

இந்த போட்டியில், முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 149 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 556 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ஷபிக் 102 ரன்களும், கேப்டன் ஷான் மசூத் 151 ரன்களும், அகா சல்மான் 104 ரன்களும் எடுத்தனர்.

விளம்பரம்

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 150 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 823 ரன்கள் குவித்திருந்தபோது போட்டியை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதாவது, வெறும் 900 பந்துகளில் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் 823 ரன்கள் குவித்து கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியது. ஜோரூட் 262 ரன்களும், ஹேரி ப்ரூக் 317 ரன்களும் குவித்தனர்.

இருவரும் 4 ஆவது விக்கெட்டிற்கு 454 ரன்கள் குவித்து சாதனை படைத்தனர். இதையடுத்து, 267 ரன்கள் பின் தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி தனது 2 ஆவது இன்னிங்சை தொடங்கியது. 54.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணியால் 220 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

விளம்பரம்

இதையும் படிங்க – Mohammed Shami | நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்… இந்திய அணியில் முகமது ஷமி ஏன் இடம்பெறவில்லை?

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500+ ரன்கள் எடுத்தும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அணி என்ற மிக மோசமான சாதனையை ஏற்படுத்திய முதல் அணியாக மாறியுள்ளது பாகிஸ்தான். ஏற்கனவே பல தொடர்களில் மோசமான ஆட்டத்தை அந்த அணி வெளிப்படுத்தி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான நிலையில், இந்த மோசமான ரிக்கார்ட் ரசிகர்களை கொதிப்படைய செய்துள்ளது.

விளம்பரம்

.



Source link