உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டையை நிர்வகிப்பதில் நீங்கள் சிரமப்படுகிறீர்களா? அல்லது ஆதார் அட்டை தொடர்பான தகவல்கள் தேவைப்படும் நேரத்தில் குடும்ப உறுப்பினர்களை அணுகுவதில் சிக்கல் ஏற்படுகிறதா? அப்படியானால், mAadhaar ஆப் ஆனது இது போன்ற பிரச்சனைகளில் இருந்து உங்களை விடுவித்து, ஒரு எளிய தீர்வை வழங்குகிறது.
mAadhaar ஆப் மூலம், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் தகவல்களை எப்போது வேண்டுமானாலும் அணுக உங்களை அனுமதிக்கிறது. இதைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் மீண்டும் மீண்டும் உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து ஆதார் அட்டையை கேட்க வேண்டிய அவசிமில்லை. இதற்காக நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் ப்ரொபைல்களை mAadhaar ஆப் உடன் இணைக்க வேண்டும். இந்த செயல்முறை மிகவும் எளிதானது மற்றும் பாதுகாப்பானது. அதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
mAadhaar ஆப் என்றால் என்ன?
mAadhaar ஆப் என்பது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) உருவாக்கப்பட்ட மொபைல் ஆப் ஆகும். இது ஆதார் தொடர்பான தகவல்களை டிஜிட்டல் முறையில் வைத்திருக்க யூசர்களை அனுமதிக்கிறது மற்றும் இ-ஆதாரை டவுன்லோட் செய்வது, ப்ரொபைல்களை அப்டேட் செய்வது மற்றும் பயோமெட்ரிக் டேட்டாவை லாக் அல்லது அன்லாக் செய்வது போன்ற சேவைகளை வழங்குகிறது. இது தவிர, ஒரே நேரத்தில் பல ஆதார் ப்ரொபைல்களை இணைக்க மற்றும் நிர்வகிக்கும் வசதியை இந்த ஆப் வழங்குகிறது.
mAadhaar ஆப்-ன் நன்மைகள்:
mAadhaar ஆப்-ஐ பயன்படுத்துவது மிகவும் எளிதானது. இதன் மூலம், ஒரே ஆப்-ல் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் ப்ரொபைல்களை டிஜிட்டல் முறையில் பராமரிக்கலாம். mAadhaar ஆப்-ன் முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் ஆஃப்லைனில் இருந்தாலும், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விவரங்களை எப்போது வேண்டுமானாலும் அக்சஸ் செய்ய முடியும்.
பல ஆதார் சுய விவரங்களை உருவாக்குவதற்கான படிப்படியான வழிகாட்டி:
1. mAadhaar ஆப்-ஐ டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும்:
உங்களிடம் mAadhaar ஆப் இல்லையென்றால், ஆன்ட்ராய்டு டிவைஸ்களுக்கான கூகுள் பிளே ஸ்டார் அல்லது iOS டிவைஸ்களுக்கான ஆப்பிள் ஆப் ஸ்டார் ஆகியவற்றில் இருந்து mAadhaar ஆப்-ஐ டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
இதையும் படிக்க:
சிம் கார்டு வாங்க இன்று முதல் புதிய விதிகள் அறிமுகம்.. என்னென்ன தெரியுமா? – முழு விவரம்!
2. உங்கள் ஆதார் சுய விவரத்தை பதிவு செய்யவும்:
mAadhaar ஆப்-ஐ ஓபன் செய்து, உங்கள் ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் ஐடியை (VID) பயன்படுத்தி லாகின் செய்யவும்.
லாகின் செய்ததும், உங்கள் ப்ரொபைல்களை சரிபார்க்க உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTPஐ என்டர் செய்யவும்.
உங்கள் ப்ரொபைலை சரிபார்த்த பிறகு, உங்களுடைய ஆதார் விவரங்கள் ஆப்-இன் டாஷ்போர்டில் காட்டப்படும்.
3. குடும்ப உறுப்பினரின் ப்ரொபைல்களை சேர்க்கவும்:
அதிகபட்சமாக 5 குடும்ப உறுப்பினர்களின் ஆதார் ப்ரொபைல்களை இந்த ஆப் மூலம் இணைக்க முடியும்.
புதிய ப்ரொபைல்களை சேர்க்க டாஷ்போர்டில், “ஆட் ப்ரொபைல்” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
உங்கள் குடும்ப உறுப்பினரின் ஆதார் அட்டையில் உள்ள ஆதார் எண்ணை என்டர் செய்யவும் அல்லது QR கோட்-ஐ ஸ்கேன் செய்யவும்.
குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை சரிபார்ப்பதற்காக, அவர்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
OTP பெற்றவுடன், குடும்ப உறுப்பினரின் ஆதார் ப்ரொபைல்களை சரிபார்க்க, ஆப்-இல் OTPஐ என்டர் செய்யவும்.
4. பல ப்ரொபைல்களை அக்சஸ் செய்யவும்:
குடும்ப உறுப்பினரின் ஆதார் சரிபார்க்கப்பட்டதும், அவர்களின் ப்ரொபைல்கள் mAadhaar ஆப்-ல் தோன்றும். ஒருவரின் ப்ரொபைல்களில் இருந்து மற்றொருவர் ப்ரொபைல்களுக்கு மாற, ப்ரொபைல் பகுதிக்குச் சென்று, உங்களுக்குத் தேவையான குடும்ப உறுப்பினரின் ப்ரொபைல்களை தேர்ந்தெடுக்கவும்.
5. குடும்ப உறுப்பினர்களின் ப்ரொபைல்களுக்குக் கிடைக்கும் சிறப்பம்சங்கள்:
eAadhaar ஆப்-ஐ டவுன்லோட் செய்யவும். குடும்ப உறுப்பினர்களின் முகவரி மற்றும் பிற விவரங்களை அப்டேட் செய்யலாம். பயோமெட்ரிக்கை லாக் அல்லது அன்லாக் செய்வதன் மூலம் ஆதார் டேட்டாவை பாதுகாக்கலாம். சரிபார்ப்புக்காக ஆதார் QR கோட்-ஐ நேரடியாக ஷேர் செய்யலாம்.
இதையும் படிக்க:
Gas Cylinders Price | மீண்டும் உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை… தொடர் விலையேற்றத்தால் வணிகர்கள் ஷாக்!
மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விவரங்கள்:
சரிபார்ப்பின்போது OTP-ஐ பெற ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும், அவர்களின் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைத்திருக்க வேண்டும்.
அதிகபட்சமாக 5 குடும்ப உறுப்பினர்களின் ஆதார் ப்ரொபைல்களை இந்த ஆப் மூலம் இணைக்க முடியும்.
ஆதார் விவரங்களை பாதுகாக்க ஒவ்வொரு செஷன்-க்கு பிறகும் லாக்அவுட் செய்யவும்.
.