நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் 3 டெஸ்ட் போட்டிகளுக்கான கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்த உள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ஜஸ்பிரீத் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் இளம் வீரர் யசஷ்வி ஜெய்ஸ்வால், ஷூப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், சர்ப்ராஸ் கான், விக்கெட் கீப்பர்களாக துருவ் ஜூரல், ரிஷப் பன்ட், ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் பிரதான அணியில் இடம்பிடித்துள்ளனர். மாற்று வீரர்களாக ஹர்ஷித் ராணா, நிதிஷ்குமார் ரெட்டி, மயங்க் யாதவ் பிரஷித் கிருஷ்ணா உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 16 ஆம் தேதி பெங்களூருவில் தொடங்க இருக்கிறது.

முகமது ஷமி ஏன் இடம்பெறவில்லை?: கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஏற்பட்ட கணுக்கால் காயத்தால் முகமது ஷமி அணியில் இடம்பெறவில்லை. காயத்தில் இருந்து மீண்ட ஷமி, அணிக்கு திரும்புவதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். இதனால், வங்கதேச தொடருக்கே அவர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷமி தேர்வு செய்யப்படவில்லை.

விளம்பரம்

நியூசிலாந்து தொடருக்காவது தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுளளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

Also Read |
Magnetic style da! தல தோனியின் புதிய லுக்! ரசிகர்கள் உற்சாகம்

அதேநேரம் இன்னொரு தகவலில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பொருட்டு, அந்த தொடருக்குள் முழு உடற்தகுதியை ஷமி எட்டும் வகையில் அவர் தேர்வு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

விளம்பரம்

ஏனென்றால், ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்படும் என்பதால், ஷமி அதில் முக்கியமான வீரராக இருக்கக்கூடும் எனக் கருதி அவர் உடற்தகுதியை மீட்க அவகாசம் அளிக்கும் விதமாக நியூசிலாந்து தொடருக்கு தேர்வு செய்யவில்லை என கூறப்படுகிறது.

.



Source link