உலகெங்கும் கருத்து வேறுபாடுகள் நிலவும் நிலையில் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கிடையிலான நட்புறவு மிகவும் முக்கியம் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

லாவோஸில் நடைபெறும் 21ஆவது ஆசியான் – இந்தியா உச்சிமாநாட்டில் பங்கேற்க வியன்டியன் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்குள்ள இந்திய வம்சாவளியினர் ஆரவாரம் செய்து பிரதமர் மோடியை வரவேற்றனர். பின்னர் லாவோஸில் நடந்த ராமாயண நிகழ்ச்சியை பிரதமர் மோடி கண்டுகளித்தார்.

இதையும் படிக்க:
ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்? – மத்திய அரசு விளக்கம்!

விளம்பரம்

இதையடுத்து லாவோஸ் தலைநகர் வியன்டியேனில் நடைபெறும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அமைப்பான ஆசியானின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, “இந்தோ -பசிபிக் பிராந்தியத்தில் ஆசியான் நாடுகளின் ஒற்றுமை மற்றும் நடுநிலைத்துவத்திற்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும்” எனத் தெரிவித்தார். இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் கடல் பிராந்தியத்தில் சீனா அத்துமீறி நடந்து வரும் நிலையில் இந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “நாங்கள்லாம் அமைதியை விரும்பும் நாடுகள்” என்றும் “மற்ற நாடுகளின் இறையாண்மையை மதிப்பவர்கள்” என்றும் குறிப்பிட்டார்.

கோரை பாய் பிசினஸ்… ஒருமுறை உழுது விதைச்சா போதும் 20 வருஷத்துக்கு லாபம் பாக்கலாம்.!


கோரை பாய் பிசினஸ்… ஒருமுறை உழுது விதைச்சா போதும் 20 வருஷத்துக்கு லாபம் பாக்கலாம்.!

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மற்றும் தென்கிழக்கு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் இருமடங்கு அதிகரித்து, 130 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார்.

மேலும், 2025 ஆம் ஆண்டை, இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளின் சுற்றுலா ஆண்டாகக் கொண்டாடுவது உள்ளிட்ட 10 அம்ச திட்டத்தையும் வெளியிட்டார்.

இந்த மாநாட்டின் தலைவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ஆசியான் நாடுகள் மற்றும் இந்தியாவுக்கு இடையே பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, ராணுவம், கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

.



Source link