கடந்த மாதம் தங்கம் சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், டிசம்பர் மாதத்தின் முதல் பணிநாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை (30.11.2024) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.7,150-க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.57,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று (02.12.2024) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.60 குறைந்து, ரூ.7,090-க்கும், ஒரு சவரன் ரூ.480 குறைந்து ரூ.56,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
பாஸ்போர்ட் சேவை முதல் சிறிய சேமிப்பு திட்டங்கள் வரை.. தபால் நிலையத்தில் கிடைக்கும் சேவைகள்!

இதேபோன்று 18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.50 குறைந்து, ரூ.5,860-க்கும், ஒரு சவரன் ரூ.400 குறைந்து ரூ.46,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்.!


சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்.!

அதேநேரம், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

.



Source link