மழையுடன் கூடிய காலநிலையால் சோளச் செய்கையில் படைப்புழு தாக்கம் தலை தூக்கியுள்ளது. இந்த படைப்புளு தாக்கத்தினை முதிர்ச்சியடையுமுன் உங்கள் பகுதியில் உள்ள விவசாய ஆலோசகரிடம் தெரிவித்து இதனை கட்டுப்படுத்த தேவையான அறிவுரைகளை பெற்றுக்கொள்ளுமாறு வடமத்திய மாகாண விவசாய பணிப்பாளர், விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஜரட்ட பகுதியில் சீரற்ற கால நிலை நிலவுவதால் படைப்புளுவின் தாக்கம் தென்படுவதாகவும் அதன் தாக்கம் அதிகரிக்ககூடிய அபாயம் உள்ளது எனவும் வடமத்திய மாகாண விவசாய பணிப்பாளர் கலாநிதி புத்திக அமேசிங்க தெரிவித்தார். அனுராதபுரம் அலயாபத்துவ பகுதியில் இந்த படைப்புளு காணக்கூடியதாக உள்ளதாகவும் இந்த தாக்கம் அதிகரிப்பதற்கு முன்னர் தங்களது பகுதியில் உள்ள விவசாய ஆலோசகரிடம் தெரிவித்து, இந்த தாக்கத்தினை பராமரிக்க ஆலோசனை பெற்றுக் கொள்ளுமாறு பணிப்பாளர் விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
The post சோளச் செய்கையில் படைப்புழுத் தாக்கம் appeared first on Thinakaran.