அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகிய மில்டன் புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மில்டன் புயல் அதிபயங்கர புயலான 5ம் வகை புயலாக அங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், 260 கி.மீ. வேகம் வரை சூறை காற்று வீசக் கூடும் என எச்சரிக்கைவிடப்பட்டது. இதனால், புளோரிடாவில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து லட்சக் கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டனர். அதேபோல், பாதுகாப்புப் பணிக்காக ஆயிரம் கணக்கான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.

விளம்பரம்

மேலும், கல்ஃப் கோஸ்ட் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. மணிக்கு 205 கிலோமீட்டர் வேகம் வரை வீசிய சூறைக்காற்றால் கட்டடங்கள், மரங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்தன. டாம்பா நகரில் மில்டன் சூறாவளியால் 8 முதல் 14 அங்குல மழை கொட்டியது. பல இடங்களில் மின்சார சேவைகளும் பாதிக்கப்பட்டன.

புளோரிடா மாகாணத்தில், உள்ள டிராபிகானா ஃபீல்டு பேஸ்பால் மைதானத்தின் கூரைகள் பலத்த காற்று காரணமாக கிழிந்து சேதமடைந்தன.

இந்நிலையில், புளோரிடா மாகாணத்தின் சீஸ்டா கீ பகுதியருகே அந்நாட்டு நேரப்படி நேற்றிரவு 8.30 மணிக்கு மில்டன் புயல் கரையை கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் சில பகுதிகளில் மழை நீடித்துவருவதாக சொல்லப்படுகிறது.

விளம்பரம்

.



Source link