ஓய்வு காலத்திற்கான திட்டமிடல் என்பது நம்முடைய பொருளாதார நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு பாதுகாப்பான ஓய்வு காலம் நம்முடைய வசந்த காலத்தை எந்தவொரு பொருளாதார அழுத்தமும் இல்லாமல் ஆரோக்கியம், நமக்கு பிடித்தமான விஷயங்கள் மற்றும் குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வதில் மட்டுமே கவனம் செலுத்த உதவுகிறது. உங்களுடைய ஓய்வு காலத்திற்கு இன்னும் 10 வருடங்கள் இருந்தாலும் சரி, அல்லது நீங்கள் ஒரு இளைஞராக இருந்தாலும் சரி. அதனை சரியாக திட்டமிடுவதற்கு உதவும் ஒரு சில குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

விளம்பரம்

முன்னதாகவே சேமிக்க தொடங்கவும்

நீங்கள் எவ்வளவு சீக்கிரமாக சேமிக்க ஆரம்பிக்கிறீர்களோ, உங்களுடைய பணம் அவ்வளவு பெருசாக வளரும். கூட்டு வட்டி என்பது உங்களுடைய ஓய்வு கால பணத்தை பல மடங்கு அதிகரித்துக் கொடுக்கும். தொடர்ச்சியாக நீங்கள் உங்களுடைய பங்களிப்புகளை இதற்கு கொடுக்க வேண்டும்.

பப்ளிக் பிராவிடண்ட் பண்ட் (PPF) அல்லது எம்பிளாயிஸ் பிராவிடண்ட் ஃபண்ட் (EPF) போன்றவை நீண்டகால வளர்ச்சி மற்றும் வரி சலுகைகளை வழங்குகின்றன. உங்களுடைய வருமானத்தில் 15 முதல் 20 சதவீதத்தை ஓய்வு காலத்திற்காக சேமிப்பது சிறந்தது.

விளம்பரம்

புத்திசாலித்தனமான முதலீடு

சேமிப்பு மட்டுமே உங்களுடைய ஓய்வு காலத்திற்கு போதாது. ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட் செய்வது அவசியம். எனவே உங்களுடைய சேமிப்பை ஃபிக்சட் டெபாசிட், ரியல் எஸ்டேட், தங்கம் போன்ற பல்வேறு முதலீடுகளில் செலுத்த வேண்டும். நேஷனல் பென்ஷன் ஸ்கீம் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் ரிட்டயர்மென்ட் திட்டங்கள் போன்றவையும் உங்களுடைய ஓய்வு காலத்தில் நிரந்தர வருமானத்தை தருவதற்கான சில வழிகள்.

எமர்ஜென்சி ஃபண்டு

திட்டமிடப்படாத செலவுகள் உங்களுடைய பொருளாதார திட்டத்தை தலைகீழாக கவிழ்க்கலாம். 6 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரையிலான செலவுகளை சமாளிப்பதற்கு தேவையான தொகை உங்களுடைய எமர்ஜென்சி ஃபண்டில் இருக்க வேண்டும். இது எதிர்பாராத மருத்துவ செலவுகள் அல்லது பர்சனல், அவசரகால செலவுகளை சமாளிப்பதற்கு உதவும்.

விளம்பரம்

ஹெல்த் இன்சூரன்ஸ்

நமக்கு வயதாகும்போது மருத்துவச் செலவுகள் அதிகமாகலாம். எனவே ஒரு விரிவான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் உங்களுடைய சேமிப்பை பாதுகாத்து எதிர்பாராத செலவுகளில் இருந்து உங்களை பாதுகாக்கும். எனவே குறைந்த பிரிமியம் கொண்ட ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்குவது நல்லது. மேலும் நீங்கள் வாங்கும் காப்பீட்டு திட்டத்தில் மருத்துவமனைக்கான செலவு மற்றும் ஓய்வு காலத்திற்கு பிறகான பராமரிப்பு போன்ற நன்மைகள் இருக்குமாறு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பண வீக்கத்திற்கான திட்டமிடல்

வருடங்கள் கடந்து செல்லும்போது, வாழ்வாதார செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எனவே இதனை நீங்கள் கருத்தில் கொள்ளாவிட்டால் உங்களுடைய ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்க முடியாது. ஆகவே பணவீக்க விகிதங்களை கருத்தில் கொண்டு உங்களுடைய ஓய்வு கால திட்டத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.

விளம்பரம்

கடன்களை செலுத்தவும்

கடன்களை உங்களுடைய ஓய்வு காலம் வரை எடுத்துச் செல்வது உங்களுக்கு வீண் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். எனவே முடிந்தவரை உங்களுடைய கிரெடிட் கார்டு அல்லது பர்சனல் லோன் போன்றவற்றை ஓய்வு காலத்திற்கு முன்பே அடைப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

இதையும் படிக்க:
SBI FD : 36 மாதங்களில் ரூ. 6 லட்சம் டெபாசிட் செய்தால் எவ்வளவு கிடைக்கும்? சரியான கணக்கீடை தெரிந்துகொள்ளுங்கள்…

ஓய்வு காலத்திற்கான பட்ஜெட்

உங்களுடைய ஓய்வு கால வாழ்க்கை முறையை புரிந்து கொண்டு அதற்கான செலவு எவ்வளவு ஆகும் என்பதை தோராயமாக கணக்கிட வேண்டும். வாழ்வதற்கான செலவுகள், மருத்துவச் செலவுகள், பயணம் மற்றும் ஓய்வு கால செயல்பாடுகளுக்கான செலவுகள் போன்றவற்றை உங்கள் பட்ஜெட்டில் சேர்க்க வேண்டும்.

விளம்பரம்

மறைமுக வருமானம்

வாடகை விடுவதற்கு சொத்துகள், ஸ்டாக்குகள் போன்ற ஓய்வு காலத்திற்குப் பிறகும் வருமானம் ஈட்டி தரக்கூடிய விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.

நாமினிக்கான திட்டமிடல் உங்களுடைய காலத்திற்குப் பிறகு உங்கள் சொத்துக்கள் அனைத்தும் யாருக்கு சென்றடைய வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது எந்தவிதமான சட்டரீதியான சிக்கல்களை தவிர்ப்பதற்கு உதவும்.

இதையும் படிக்க:
சொத்து பத்திரங்கள் காணாமல் போய்விட்டதா? பதற்றமடையாமல் அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்….

பொருளாதார ஆலோசகரிடம் பேசவும்

ஓய்வு கால திட்டமிடல் என்பது ஒரு சிக்கலான விஷயம். இதனை நிபுணர்களின் வழிகாட்டுதல் மூலமாக நம்மால் சிறப்பாக செய்ய முடியும். எனவே உங்களுடைய இலக்குகள் மற்றும் எந்த அளவுக்கு உங்களால் அபாயங்களை ஏற்றுக் கொள்ள முடியும் என்பது போன்றவற்றை தெரிவித்து, நல்ல முடிவு எடுப்பதற்கு ஒரு பொருளாதார ஆலோசகரை சந்தித்துப் பேசுங்கள்.

விளம்பரம்

.



Source link