இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் மும்பை அணி வீரருமான ரோகித் சர்மாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவர்களின் குழந்தைக்கு அஹான் என பெயர் வைத்திருக்கிறார்கள் ரோகித் – ரித்திகா தம்பதி.

அவரின் இந்த தனிப்பட்ட காரணத்திற்காக ஆஸ்திரேலியாவுடனான பார்டர் – கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இதனால் அவர் இரண்டாவது போட்டியில் நேரடியாக இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் அவர் மும்பை அணிக்காக விளையாடவுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு வரை ரோகித் சர்மா மும்பை அணிக்கு கேப்டனாக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது மும்பை நிர்வாகம்.

விளம்பரம்

இதையும் படிக்க:
குழந்தைக்கு ‘அஹான்’ எனப் பெயர் சூட்டிய ரோகித்-ரித்திகா தம்பதி.. பெயருக்கான அர்த்தம் தெரியுமா?

இந்த நிலையில் தான் ரோகித் சர்மாவை ரூ.16.30 கோடிக்கு தக்கவைத்தது மும்பை அணி. ரோகித் சர்மா குறித்து பல விஷயங்கள் ரசிகர்களுக்கு தெரிந்திருந்தாலும், சில விஷயங்கள் ரசிகர்களுக்கே ஆச்சரியமளிக்கும் வகையில் இருக்கும். அப்படி ஒன்று தான் அவரது தாய் மொழி குறித்தான விஷயம்.

ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உகந்த 5 சாறுகள்.!


ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உகந்த 5 சாறுகள்.!

கடந்த 2019ஆம் ஆண்டு மும்பை அணி பகிர்ந்த வீடியோ ஒன்றில், ரோகித் சர்மா அவரது தாய் மொழி என்ன என்பது குறித்து தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறும்போது, ‘இது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். நான் பொய் சொல்வதாக கூட பலர் நினைக்கலாம். ஆனால் இது தான் உண்மை. எனது தாய் மொழி தெலுங்கு’ என்று கூறியுள்ளார்.

விளம்பரம்

இந்த வீடியோ இதுவரை சுமார் 6 லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ளது. மேலும் அந்த வீடியோவில், அவர் தான் நாக்பூரில் கடந்த 1987ஆம் ஆண்டு பிறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

.



Source link