Amazfit நிறுவனம் அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட் வாட்ச்சான T-Rex 3-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச்சின் உறுதியான வடிவமைப்பு பாதகமான வானிலை நிலைகளைத் தாங்கும் வகையில் உள்ளது மற்றும் 100 மீட்டர் வரை நீரில் மூழ்கினாலும் சேதம் ஏற்படாதவாறு உள்ளது.

இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட் வாட்ச் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெசல் கொண்ட 1.5-இன்ச் சர்குலர் டிஸ்ப்ளேயுடன் வருகிறது மேலும் 27 நாட்கள் வரையிலான பேட்டரி லைஃபை வழங்குவதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட் வாட்ச் ChatGPT-ஐ சப்போர்ட் செய்கிறது. அதிகமான யூஸர்களை இந்த புதிய தயாரிப்பின் மூலம் கவர்ந்திழுக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதால் சிறந்த டிஸைன் மற்றும் ஸ்மார்ட் அம்சங்களின் கலவையை T-Rex 3 வாங்குவோர் பெறுவார்கள்.

விளம்பரம்

இந்தியாவில் Amazfit T-Rex 3 ஸ்மார்ட் வாட்ச்சின் விலை…

செப்டம்பர் 27ஆம் தேதியன்று இந்தியாவில் விற்பனைக்கு வந்த Amazfit T-Rex 3 ஸ்மார்ட் வாட்ச்சின் விலை ரூ.19,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Amazfit T-Rex 3 ஸ்மார்ட் வாட்சின் அம்சங்கள்:

இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் 480 × 480 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்மற்றும் 2,000 nits பீக் பிரைட்னஸ் கொண்ட சர்குலர் 1.5-இன்ச் AMOLED டச் ஸ்கிரீனைக் கொண்டுள்ளது. மேலும் இந்த டிவைஸ் கூடுதல் பாதுகாப்பிற்காக கொரில்லா கிளாஸ் ப்ரொட்டக்ஷனையும் கொண்டுள்ளது. ZeppOS 4-ல் இயங்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச், 10 ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் மிலிட்டரி கிரேட் பில்ட்டுடன் வருகிறது.

விளம்பரம்

புதிய T-Rex 3 ஸ்மார்ட் வாட்ச் Zepp ஆப்ஸுடன் இணக்கமானது மற்றும் OpenAI-ன் GPT-4o AI அசிஸ்டென்ட் மற்றும் GPS கனெக்டிவிட்டிக்கான சப்போர்ட்டுடன் வருகிறது. இது அல்ட்ராமரத்தான், ஹைராக்ஸ் ரேஸ், ஃப்ரீடிவிங் மற்றும் இம்ப்ரூவ்ட் ஸ்ட்ரென்த் ட்ரெயினிங் மோட் போன்ற 170-க்கும் ப்ரீசெட் ட்ரெயினிங் மோட்ஸ்களை கொண்டுள்ளது. அதே போல Amazfit T-Rex 3 ஸ்மார்ட் வாட்சின் முக்கிய அம்சங்களில் ஒன்று Zepp Flow-வை பயன்படுத்தி வாய்ஸ் கமென்ட் திறன் கொண்டிருப்பதாகும். இது OpenAI-ன் ChatGPT-ஆல் சாத்தியமாக்கப்பட்டுள்ளது. iOS 14.0 அல்லது ஆன்ட்ராய்டு 7.0 இயங்கும் ஸ்மார்ட்போன்கள் இதைப் பயன்படுத்தலாம்.

விளம்பரம்

இதையும் படிக்க:
5 வயதிற்குள்ளான குழந்தைக்கு ஆதார் எடுத்து இருக்கீங்களா..? அப்போ கட்டாயம் இத செய்யுங்க

இதயத் துடிப்பு, பிளட் ஆக்ஸிஜன் லெவல் மற்றும் பலவற்றை கண்காணிக்க உதவும் BioTracker PPG பயோமெட்ரிக் சென்சார் இதில் பொருத்தப்பட்டுள்ளது. Amazfit T-Rex 3 ஒரு முழுமையான இன்டகிரேடட் AI சிஸ்டமுடன் இயங்கும் முதல் ஸ்மார் வாட்ச் ஆகும், மேலும் இது OpenAI-ன் GPT-4 மாடலால் இயக்கப்படும் AI அசிஸ்டென்ட்டை கொண்டுள்ளது.

இதையும் படிக்க:
அதிரடியாக விலை குறைக்கப்பட்ட ஹானர் 200 ப்ரோ 5ஜி மொபைல்!

இந்த ஸ்மார்ட் வாட்சில் 700 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கமான பயன்பாட்டுடன் 27 நாட்கள் வரை பேட்டரி லைஃபை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரம் பேட்டரி-சேவர் செட்டிங்கில் சுமார் 40 நாட்கள் வரை பேட்டரி லைஃபை எதிர்பார்க்கலாம்.

.



Source link