வங்கதேசத்திற்கு எதிரான 2 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 மேட்ச்சுகளில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

விளம்பரம்

இதைத் தொடர்ந்து தற்போது டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குவாலியரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2 ஆவது போட்டி இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தி நடைபெற்றது.

டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களம் இறங்கினர். சாம்சன் 10 ரன்களும், அபிஷேக் சர்மா 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8 ரன்னில் வெளியேறினார்.

இதனால் இந்திய அணி 5.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் இணை அதிரடியாக ரன்கள் குவித்து ஸ்கோரை உயர்த்தியது. நிதிஷ் ரெட்டி 34 பந்துகளில் 7 சிக்சருடன் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ரின்கு சிங் 29 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யா 32 ரன்னும், ரியான் பராக் 15 ரன்னும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 221 ரன்கள் குவித்தது.

விளம்பரம்

இதையடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில், மகமதுல்லா மட்டும் அதிகபட்சமாக 41 ரன்க்ள எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் 20க்கும் குறைவான ரன்கள் எடுத்தனர். பவுலர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி 135 ரன்கள் மட்டுமே எடுத்து 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதையும் படிங்க – ஸ்ரீநாத் முதல் மயங்க் யாதவ் வரை… மணிக்கு 150+ கி.மீ. வேகத்தில் பந்துவீசிய டாப் 10 இந்திய பவுலர்கள்!

விளம்பரம்

பவுலர்களில் நிதிஷ் ரெட்டி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

.



Source link