கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருந்தார்கள். அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்திலும் மக்கள் அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்திருந்தார்கள்.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கான உலர் உணவு பொருட்களையும் வழங்கி வைத்தார்.

இதில் முதற்கட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான டிக்கோயா, பொகவந்தலாவ, அக்கரபத்தனை ஆகிய பகுதி மக்களுக்கான நிவாரணப் பொதிகள் (30) வழங்கி வைக்கப்பட்டது.

பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இதன்போது நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், பிரதித் தலைவர் அனுஷா சிவராஜா, போசகர் சிவராஜா, தொழிற்சங்கப் பிரிவு தேசிய அமைப்பாளர் லோகதாஸ், உப தலைவர் சச்சுதானந்தன், காரியாலய உத்தியோகஸ்தர்கள் உட்பட பலர் சென்றிருந்தனர்.

The post “அனர்த்தத்தால் பாதிப்புற்றோருக்கு நிவாரணப் பொதிகளை வழங்கிய ஜீவன் தொண்டமான்” appeared first on Thinakaran.



Source link