ஆதார் எண் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்திற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), தனிநபர்களுக்கு வழங்கிய தனிப்பட்ட அடையாள எண் ஆகும். இது இந்தியாவில் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக செயல்படுகிறது. ஆதார் என்பது முக்கியமான அடையாளமாக உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, அரசின் சார்பில் வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் பெறுவதற்கு ஆதார் மிகவும் அவசியமாக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 5 வயது குழந்தைகளுக்கு ஆதார் என்பது எவ்வளவு முக்கியம் அதனை அப்டேட் செய்வதன் முக்கியத்துவம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
அதாவது ஐந்து வயது கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஆதார் எடுத்து இருந்தால் அவர்களுக்கு ஐந்து வயது முடிந்தவுடன், ஆறாவது வயது தொடங்கியவுடன் , அவர்களுக்கு கைரேகை பதிவும், முக உருவ மாற்றத்தையும் மாற்றம் செய்ய வேண்டும். ஏனென்றால், முந்தைய ஆதாரத்தில் அவர்களுடைய பெற்றோரின் கைரேகையின் அடிபப்டையில் தான் ஆதார் கார்டு வழங்கப்பட்டிருக்கும். மேலும், அந்த ஆதார் அட்டையிலும் ஐந்து வரை மட்டுமே செல்லுபடி ஆகும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே அதனை அப்டேட் செய்வது மிகவும் அவசியம் ஆகும்.
அதே போல ஐந்து வயதிற்கு மேல் ஆதார் எடுத்த குழந்தைகளுக்கும் ஐந்து வயதிலிருந்து பத்து வயது வரை மட்டுமே அந்த ஆதாரை பயன்படுத்த முடியும். ஏனென்றால் கைரேகை பதிவு மாறி இருக்கும் அதனால் 10 வயது முடிந்தும் அப்டேட் செய்வது முக்கியம்.
பொதுவாகவே வயது மாற்றத்தில் ரேகை மாற்றம் என்பது இருக்கும், அதனால் ஒரு ஐந்து வருடம், பத்து வருடம் இடைவெளி விட்டு கைரேகை பதிவை மாற்றம் செய்ய வேண்டும். இதனை நீங்கள் எந்த இ- சேவை மையமும், வீட்டிலிருந்தபடியே மாற்றம் செய்ய முடியாது. நகராட்சி மாநகராட்சி ஆதார் சேவை நிலையங்களில் மட்டுமே மாற்றம் செய்ய முடியும் இதற்காக கட்டணம் ரூபாய் 100 ஆகும். எனவே ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அப்டேட் செய்வது கட்டாயம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.