ஹானர் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் ஹானர் 200 மற்றும் ஹானர் 200 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. இதுமட்டுமல்லாமல், சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள சீரிஸில் ஹானர் 200 லைட்டும் உள்ளது. அதில், ஹானர் 200 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஹானர் சீரிஸின் சிறந்த மாடலாகும்.
ரூ.57,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்டுடியோ ஹார்கோர்ட்டுடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட AI தொழில்நுட்பத்துடன் இயங்கும் போர்ட்ராய்டு டெலிபோட்டோ கேமராக்கள், டூயல் 50-மெகாபிக்சல் கேமராக்கள், 4,000 நிட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 5,200mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் வருகிறது. தற்போது, இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,000 தள்ளுபடி விலையில் விற்பனையாகிறது.
இதையும் படிக்க:
பொழுதுபோக்கிற்காக ஆரம்பித்த தொழில்… 20 வயதில் சாதித்து காட்டிய இளம் தொழிலதிபர்!
ஹானர் 200 ப்ரோ 5G தள்ளுபடி: ஹானர் 200 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.57,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், தற்போது நிறுவனத்தின் பண்டிகை கொண்டத்தின் ஒரு பகுதியாக, இந்த ஹானர் 200 ப்ரோவை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.13,000 உடனடி தள்ளுபடியை வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, எஸ்பிஐ டெபிட் அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் போனின் விலை ரூ.43,999 ஆக குறைந்துள்ளது.
ஹானர் 200 ப்ரோ 5G அம்சங்கள்: ஹானர் 200 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது பெரிய 6.78-இன்ச் குவாட்-கர்வ் ஃப்ளோட்டிங் ஸ்கிரீன்-ஐ கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த ஹானர் 200 ப்ரோ போனில் அல்ட்ரா பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. அதாவது, 50 எம்பி மெயின் கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 50 எம்பி போர்ட்ராய்டு டெலிபோட்டோ கேமரா ஆகியவற்றுடன் வருகிறது. மெயின் கேமராவில் OmniVision OV50H சென்சார் மற்றும் OIS உடன் வருகிறது.
இந்த ஆண்ட்ராய்டு மொபைலானது 14 ஓஎஸ் அடிப்படையிலான MagicOS 8.0 உடன் வருகிறது. இதில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 சிப்செட் மற்றும் அட்ரினோ 735 GPU கிராபிக்ஸ் உடன் வருகிறது. இந்த ஹானர் 200 ப்ரோ ஆனது 100W சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5200mAh பேட்டரியுடன் வருகிறது. மேலும். இந்த பேட்டரிக்கு 66W வயர்லெஸ் சூப்பர்சார்ஜ் ஆதரவும் உள்ளது. இதில் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி கொண்டுள்ளது. இந்த ஹானர் 200 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஓசன் சியான் மற்றும் பிளாக் ஆகிய இரண்டு வண்ண வகைகளில் வருகிறது.
.