இந்தியாவில் Pop 9 5G மொபைலை டெக்னோ நிறுவனம்  அறிமுகம் செய்துள்ளதன் மூலம், அதன் பட்ஜெட்டுக்கு ஏற்ற 5ஜி டிவைஸ்களின் எல்லையை விரிவுப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Pop 8 மாடலின் வெற்றியை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

Tecno Pop 9 5G மொபைலின் விலை: இந்தியாவில் டெக்னோ பாப் 9 5ஜி மொபைல் 4GB ரேம் + 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 4GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் என 2 வேரியன்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விலைகள் முறையே ரூ.9,499 மற்றும் ரூ.9,999 ஆகும். இந்த மொபைலை ரூ.499 டோக்கன் தொகையுடன் முன்பதிவு செய்யலாம். வரும் அக்டோபர் 7-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது. அரோரா கிளவுட், அஸூர் ஸ்கை மற்றும் மிட்நைட் ஷேடோ என மூன்று வெவ்வேறு கலர் ஆப்ஷன்களில் இந்த மொபைல் வெளியாகியுள்ளது.

விளம்பரம்

டெக்னோ பாப் 9 5ஜி அம்சங்கள்: ஆண்ட்ராய்டு 14-ல் இயங்கும் இந்த மொபைலில் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் கூடிய LCD ஸ்கிரீன் உள்ளது மற்றும் இதில் MediaTek Dimensity 6300 SoC சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.  மேம்படுத்தப்பட்ட ஆடியோ அனுபவத்திற்காக Dolby Atmos உடன் கூடிய டூயல் ஸ்பீக்கர்களை இந்த மொபைல் கொண்டுள்ளது.

இலவங்கப்பட்டை மற்றும் தயிர் இரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் இன்சுலின் உணர்திறனை எவ்வாறு மேம்படுத்துகிறது.?


இலவங்கப்பட்டை மற்றும் தயிர் இரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் இன்சுலின் உணர்திறனை எவ்வாறு மேம்படுத்துகிறது.?

டெக்னோ பாப் 9 5ஜி மொபைலானது எல்இடி ப்ளாஷ் உடன் 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்582 ரியர் கேமரா சென்சாரை கொண்டுள்ளது. இதில் 8 மெகாபிக்சல் ஃப்ரன்ட் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் 18W வயர்டு சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 5,000 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதிலிருக்கும் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் டூயல் சிம் (நானோ + நானோ), 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக், USB-C டைப், Wi-Fi, ப்ளூடூத் மற்றும் NFC உள்ளிட்டவை அடங்கும். இந்த செக்மென்ட்டில் NFC சப்போர்ட்டுடன் கூடிய முதல் 5G ஃபோன் இது என்று கூறப்படுகிறது.

விளம்பரம்

.



Source link