புதிய போன் வாங்க நினைத்தால், இப்போது சரியான நேரமாகும். ஏனெனில் ​​இ-காமர்ஸ் தளங்களான அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகியவை பண்டிகை கால விற்பனையை தொடங்கியுள்ளன. இந்த சிறப்பு விற்பனையில் பல ஸ்மார்ட்போன்களை நம்ப முடியாத தள்ளுபடி விலையில் வாங்க முடியும்.

அதன்படி, ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் விவோ V40 5G விற்பனையில் சிறந்த ஆஃபர்கள் உள்ளன. பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் V சீரிஸில் விவோ V40e 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

விளம்பரம்

முக்கிய அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த விவோ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 ப்ராசசர், 50 MP பிரன்ட் கேமரா மற்றும் 5500mAh பேட்டரி ஆயுள் போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த போனின் விலை மற்றும் தள்ளுபடிகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

இதையும் படிக்க:
புதிய ஜியோ சிம் வேண்டுமா? உங்க வீட்டில் இருந்தே ஆக்டிவேட் செய்வது எப்படி?

விவோ V40e 5G விலை: இந்த விவோ ஸ்மார்ட்போனின் 8ஜிபி/128ஜிபி பேஸ் வேரியண்ட்டின் விலை ரூ.28,999 ஆகும். அதோடு டாப் வேரியண்ட்டின் விலை(8ஜிபி/256ஜிபி) ரூ.30,999 ஆகும்.

விளம்பரம்

விவோ V40e 5G சலுகைகள்:

ஃபிளிப்கார்ட்:  இந்த மொபைலை ஃப்ளிப்கார்ட்டில்  வாங்கும் போது சிறந்த எக்ஸ்சேன்ஜ் ஆஃபரையும் HDFC அல்லது ICICI போன்ற கார்டுகள் மூலம் பணம் செலுத்தி இந்த போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தள்ளுபடிகளையும் வழங்குகிறது.

குரோமா: குறிப்பிட்ட பேங்க் கார்டுகளின் அடிப்படையில் கேஷ்பேக் ஆஃபரை தவிர, ஜீரோ EMI ஆப்ஷன்களை வழங்குகிறது.

அமேசான்: அமேசானிலும் சிறந்த சலுகைகள் மற்றும் EMI உடன் எக்ஸ்சேன்ஜ் ஆஃபர் போன்ற ஆப்ஷன்களும் வழங்கப்படுகிறது.

விவோ V40e 5G டிஸ்ப்ளே: விவோ V40e 5G ஸ்மார்ட்போன் ஆனது 1080 x 2392 பிக்சல்கள் மற்றும் 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.77 இன்ச் முழு HD+ 3D கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
யூடியூபில் வரும் புதிய அப்டேட்.. பயனாளர்களுக்கு குட் நியூஸ்! – என்ன தெரியுமா?

விவோ V40e 5G கேமரா: விவோ V40e 5G இன் கேமராவை பொறுத்தவரையில், 50 MP பிரைமரி சென்சார் மற்றும் 8MP அல்ட்ரா-வைட் லென்ஸைக் ஆகியவற்றை கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 50 MP பிரன்ட் கேமராவை கொண்டுள்ளது.

விவோ V40e 5G ப்ராசசர்: இந்த ஸ்மார்ட்போனில் 2.5 GHz மீடியாடெக் டிமென்சிட்டி 7300 அக்டா-கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

விளம்பரம்

விவோ V40e 5G நிறம் மற்றும் வடிவமைப்பு: விவோ V40e 5G ஸ்மார்ட்போன் ஆனது ஸ்டைலான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது மின்ட் கிரீன் மற்றும் ராயல் பிராண்ஸ் போன்ற நவீன வண்ண வகைகளில் வருகிறது.

சொந்தமாக ‘தீவு’ வைத்திருக்கும் பிரபல நடிகை! யார் தெரியுமா?


சொந்தமாக ‘தீவு’ வைத்திருக்கும் பிரபல நடிகை! யார் தெரியுமா?

விவோ V40e 5G பேட்டரி ஆயுள்: 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட 5500mAh பேட்டரியை கொண்டுள்ளது.

.



Source link