வளமான நாட்டை எப்படி மயானப்பூமியாக போர் மாற்றி விடும் என்பதற்கு எடுத்துக் காட்டாய் மாறி உள்ளது காசா. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி தங்கள் நாட்டுக்குள் புகுந்து தாக்குல் நடத்திய ஹமாஸூக்கு தனது வான் படை மூலம் பதிலடி கொடுக்க ஆரம்பித்த இஸ்ரேல், காசாவில் உள்ள கட்டிடங்களை எல்லாம் தரை மட்டமாக்கியது.

கடந்த 16 ஆண்டுகால ஹமாஸ் ஆட்சியில் பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பில் மெல்ல மெல்ல ஏற்றம் கண்டு வந்த காசாவின் பெரும்பகுதியை, மீண்டு எழுவெ முடியாத வகையில் அழித்துள்ளது இஸ்ரேல் ராணுவம்.

விளம்பரம்

2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் படம்பிடிக்கப்பட்ட வீடியோ ஒன்றில் பரபரப்பு மிகுந்த காசாவின் உமர் அல்-முக்தார் தெருவில் இருபுறமும் சாலைகளுக்கு நடுவே பசுமை நிறைந்த பூங்காக்களும் அலங்கார அமைப்புகளும் காசாவிற்கு அழகூட்டியுருந்தன. ஆனால் அவை தற்போது மணல் மேடுகளாக காட்சியளிக்கின்றன.

இதையும் படியுங்கள் :
மேற்குவங்கத்தில் 9 வயது சிறுமி கொலை.. காவல் நிலையத்திற்கு தீவைத்த கிராம மக்கள்

அதே பகுதியில் மற்றொரு இடத்தில் கடைகள் நிறைந்த பகுதியில் வியாபாரம் களைகட்டி கொண்டிருக்க, நெரிசல் ஏற்படும் அளவிற்கு வாகன போக்குவரத்துடன் காணப்பட்ட சாலைகள் தற்போது இருந்த இடம் தெரியாமல் உருகுலைந்து போயி உள்ளன.

விளம்பரம்

இதே போல் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எடுக்கப்பட்ட வீடியோவில் மத்திய தரைக்கடலையொட்டிய வானலாவிய கட்டடங்கள், காண்போரை பிரம்மிப்பில் ஆழ்த்தியிருந்தன. ஆனால் அவை தற்போது, கட்டட குவியல்களாக உருமாறி உள்ளன.

குடும்பம் குடும்பமாய் மகிழ்ச்சியோடு வாழ்ந்த அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும், போரின் கோரமுகத்துக்கு சாட்சியாய் மாறி உள்ளன. ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ளதாக இஸ்ரேலின் 2 முறை கடுமையான தாக்குதலுக்கு உள்ளான ஷிஃபா மருத்துவமனையை சுற்றி உள்ள பகுதிகள், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கட்டிடங்கள் இன்றி வெறும் இரும்பு கூடுகளாக காட்சியளிக்கின்றன. ஷாட்டி அகதிகள் முகாம் உள்ளிட்டவை இஸ்ரேலின் முக்கிய குறிகளாக இருந்த நிலையில், அப்பகுதிகள் தற்போது ஆள் நடமாட்டம் இன்றி திகிலூட்டி வருகின்றன.

விளம்பரம்

தாக்குதலால் காசாவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்த சுமார் 23 லட்சம் மக்களில் 90 சதவீதம் பேர் இடம்பெயர்ந்துவிட்ட நிலையில், அப்பகுதிகள் அனைத்தும் கைவிடப்பட்ட பகுதிகளாக காட்சியளிக்கின்றன. வாகனங்கள் பாய்ந்தோடிய தெற்கு மற்றும் வடக்கு காசாவை இணைக்கும் நெடுஞ்சாலை, இருந்த இடம் தெரியாமல் அழிவுக்கு உள்ளாகி உள்ளது.

.



Source link