ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் டெலிகாம் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வீட்டில் அமர்ந்து சிம் இயக்கும் வசதியை கொண்டுவந்துள்ளது. இனி ஜியோ சிம் ஆக்டிவேஷனுக்கு ஜியோ எக்ஸிகியூட்டிவிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த சேவைகளை iActivate என்ற பெயரில் கொண்டுவந்துள்ளதாக ஜியோ சமீபத்தில் அறிவித்தது.
மாறும் காலத்திற்கேற்ப தொழில்நுட்பமும் மாறுகிறது, அதன் சேவைகளும் எளிதாகி வருகின்றன. பொதுவாக சிம் கார்டு வாங்க வேண்டும் என்றால், கடைக்குச் சென்று அடையாளச் சான்று, போட்டோ கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்த நிலை தற்போது மாறிவிட்டது. வீட்டிலிருந்தபடியே சிம்கார்டு பெறும் சேவைகள் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளன.
ஜியோ நிறுவனமானது சமீபத்தில் ஒரு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ சிம் ஆக்டிவேஷனுக்கு இனி ஜியோ எக்ஸிகியூட்டிவ்விடம் செல்ல வேண்டியதில்லை. iActivate என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சேவைகள் மூலம், ஒருவர் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் ஜியோ சிம் கார்டை ஆக்டிவேட் செய்யலாம். அதற்கு உங்கள் கையில் ஸ்மார்ட் போன் இருந்தாலே போதும், அதை நீங்களே செயல்படுத்தலாம். எனவே இந்த சேவைகளை எவ்வாறு பெறுவது, சிம்மை ஆக்டிவேட் செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே இலவச சிம் கார்டுகளை ஹோம் டெலிவரி செய்து வருகிறது. இந்நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட iActivate மூலம், உங்கள் சிம்மை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இயக்கலாம். ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் யூசர்கள் தங்கள் ஸ்மார்ட்போனின் உதவியுடன் சிம் கார்டை ஆக்டிவேட் செய்யலாம்.
இதையும் படிக்க:
Mobile Tips | செல்போன் சார்ஜ் இப்படித்தான் போடணும்… மொபைல் நீண்ட காலம் உழைக்க முக்கிய டிப்ஸ்!
ஜியோவின் iActivate செயல்முறையானது யூசர் ஃபிரென்ட்லியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிம் ஆக்டிவேட் செயல்முறையின்போது உங்கள் மொபைல் ஃபோனில் லைவ் போட்டோ அல்லது வீடியோ எடுக்க வேண்டும். மேலும், தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த முழு செயல்முறையையும் உங்கள் ஃபோன் மூலம் எளிதாக செய்ய முடியும். எனவே சிம் இயக்கத்திற்காக ஒரு குறிப்பிட்ட கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்கள் சிம்மை வீட்டிலேயே எளிதாக ஆக்டிவேட் செய்யலாம்.
மேலும், ஜியோ யூசர்களுக்கு இலவச டெலிவரியுடன் உங்கள் வீட்டிற்கு நேரடியாக ஜியோ சிம்மை ஆர்டர் செய்யும் விருப்பமும் உள்ளது. டெலிவரி ஏஜென்ட் சிம் கார்டை உங்கள் வீட்டு வாசலில் கொண்டுவருவது மட்டுமல்லாமல், சிம்மை ஆக்டிவேட் செய்தும் கொடுப்பர். இதன் மூலம் ஜியோ சேவைகளை விரைவாகப் பெறலாம். ரிலையன்ஸ் ஜியோவின் இந்த புதிய அம்சத்தின் மூலம், யூசர்கள் ஜியோ ஸ்டோருக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. இதன் மூலம், பிஸியான காலக்கட்டங்களிலும் ஜியோ சிம்மை ஆக்டிவேட் செய்ய முடியும்.
இந்த ஜியோ iActivate அம்சமானது உங்கள் மொபைல் போனிலிருந்து நேரடியாக உங்கள் புதிய ஜியோ சிம்மை ஆக்டிவேட் செய்ய அனுமதிக்கிறது. இந்த செயல்முறையை தேர்வு செய்தால், நீங்கள் லைவ் போட்டோ அல்லது வீடியோவை அனுப்ப வேண்டும். மேலும் மற்ற ஆவணங்களும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மாற்றாக, ஜியோ சிம்மை உங்கள் வீட்டிற்கு இலவசமாக டெலிவரி செய்யும் விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்தால், அந்த நேரத்தில் டெலிவரி ஏஜென்ட் உங்கள் சிம்மை ஆக்டிவேட் செய்வார்.
இதையும் படிக்க:
அட்டகாச அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நத்திங் இயர் ஓபன்!
நீங்கள் iActivate செயல்முறையை பயன்படுத்த தேர்வுசெய்தாலும் சரி அல்லது ஆக்டிவேட் உதவியுடன் ஹோம் டெலிவரியை தேர்வுசெய்தாலும் சரி, முடிந்தவரை புதிய வாடிக்கையாளர்களின் நேரத்தை சேமிக்கவும், அவர்களுக்கு விரைவாக சேவைகளை வழங்க வேண்டும் என்பதையும் ஜியோ நோக்கமாகக் கொண்டுள்ளது.
.