ஹிஸ்புல்லா தலைவரின் அடுத்த வாரிசான சஃபிதீனும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் வாரிசாக பார்க்கப்பட்டவர் ஹஷேம் சஃபிதீன்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் செப்டம்பர் 27ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனையடுத்து அந்த அமைப்பின் துணை தலைவரான ஹஷேம் சஃபிதீன் ஹிஸ்புல்லா அமைப்புக்கு தலைமை வகிப்பவர்களில் முக்கிய நபராக செயல்பட்டு வந்தார்.

நஸ்ரல்லாவுடன் உடல் அமைப்பில் ஒத்திருக்கும் சஃபிதீன் ஹிஸ்புல்லா, ஆரம்ப காலத்திலேயே அந்த அமைப்பில் இணைந்தவர்களில் ஒருவராவார். ஹிஸ்புல்லாவின் அரசியல் விவகாரத்திற்குப் பொறுப்பாகவும் அந்த அமைப்பின் ஆயுதக் குழு உறுப்பினராகவும் செயற்பட்டு வந்தார்.

விளம்பரம்

Also Read |
Pawan Kalyan | திருக்குறளை மேற்கோள்காட்டி எம்.ஜி.ஆரை புகழ்ந்த பவன் கல்யாண்… காரணம் இதுதான்!

இந்நிலையில், ஹசன் நஸ்ரல்லாவின் மரணத்தை தொடர்ந்து, பெய்ரூட் நகரில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். அப்போது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹஷேம் சஃபிதீன் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், ஹஷேம் சஃபிதீனின் மரணத்தை இஸ்ரேல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஹஷேம் சஃபிதீனின் மரணமடைந்திருந்தால் அது ஹிஸ்புல்லா அமைப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

விளம்பரம்

.



Source link