இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 1.25 லட்சம் கோடிக்கு டிஜிட்டல் முறையில் மோசடிகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து மோசடிகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் Truecaller தற்போது அதன் ஃப்ராடு இன்சூரன்ஸ் பாலிசியை HDFC வங்கி உடன் சேர்ந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இன்சூரன்ஸ் Truecaller அப்ளிகேஷன் மூலமாக கிடைக்கிறது. மோசடி மூலமாக பயனர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளில் இருந்து இந்த இன்சூரன்ஸ் பாதுகாப்பு அளிக்கிறது. இந்த இன்சூரன்ஸ் பாலிசி குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
இன்சூரன்ஸ் பாலிசியை எடுப்பதற்கான தகுதி வரம்பு என்ன?
18 அல்லது அதற்கும் மேற்பட்ட வயது கொண்ட இந்தியர்கள், சிம்கார்டு யார் பெயரில் வாங்கி இருந்தாலும் இந்திய போன் நம்பரை பெற்றுள்ள வெளிநாட்டவர்கள், தற்காலிகமாக வெளிநாடு பயணிக்கும் இந்தியர்கள் ஆகியோர் இந்த இன்சூரன்ஸ் பெறுவதற்கு தகுதி பெறுகிறார்கள்.
இன்சூரன்ஸ் பாலிசியின் காப்பீட்டுத் தொகை எவ்வளவு?
Truecaller நம்பரில் போன் கால் அல்லது SMS மூலமாக திருடப்படும் பணத்திற்கு 10,000 ரூபாய் வரையில் காப்பீடு பணம் பயனர்களுக்கு வழங்கப்படும். எனினும் இந்த கவரேஜ் பிரத்தியேகமாக இந்தியாவில் உள்ள ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் ஆகிய இருவருக்குமே கிடைக்கிறது.
காப்பீட்டை பெறுவது எப்படி?
ஏற்கனவே உங்களிடம் அசிஸ்டன்ட், அசிஸ்டன்ட் ஃபேமிலி, பிரீமியம், பிரீமியம் ஃபேமிலி அல்லது கோல்ட் ஆகிய வருடாந்திர Truecaller சப்ஸ்கிரிப்ஷன் இருந்தால் இந்த காப்பீட்டை நீங்கள் எந்தவித கூடுதல் செலவு இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம். அதற்கு நீங்கள் அப்ளிகேஷனில் இந்த காப்பீட்டை ஆக்டிவேட் செய்தால் மட்டுமே போதும் அல்லது இந்த அப்ளிகேஷனின் சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்யும்போது இந்த அம்சத்தை ஆட்டோமேட்டிக்காக பெறுவீர்கள்.
புதிய பயனர்களுக்கு நீங்கள் பிரீமியம், பிரீமியம் ஃபேமிலி அல்லது கோல்ட் ஆகிய வருடாந்திர சப்ஸ்கிரிப்ஷன் பிளான்களை பெற வேண்டும். அப்போதுதான் இந்த மோசடி இன்சூரன்ஸை உங்களால் பயன்படுத்த முடியும்.
இதையும் படிக்க:
LPG Cylinder: கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு குட் நியூஸ்… இப்படி முன்பதிவு செய்தால் இந்த ஆஃபர் உங்களுக்குத்தான்!
இன்சூரன்ஸ் பாலிசியை எனேபிள் செய்வது எப்படி?
பாலிசியை ஆக்டிவேட் செய்வதற்கு வெறுமனே நீங்கள் Truecaller அப்ளிகேஷனில் உள்ள பிரீமியம் டேபிற்கு செல்ல வேண்டும். இந்த பதிவு என்பது ஒருமுறை மட்டுமே செய்யப்படும் செயல்முறை. அடுத்த முறை அது உங்களுடைய பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷனுடன் ஆட்டோமேட்டிக்காக புதுப்பித்துக்கொள்ளும். கூடுதலாக இதற்கு எந்த ஒரு ஆவணங்களும் தேவையில்லை.
ஒருவேளை நீங்கள் போலியான வெப்சைட் லிங்க் கொண்ட SMSஐ பெற்றாலோ, தவறுதலாக உங்களுடைய வங்கி விவரங்களை வழங்கினாலோ அல்லது மோசடிக்காரர் ஏதாவது ஒரு வழியில் உங்களை ஏமாற்றி உங்களுடைய வங்கி தகவல்களை போன் மூலமாக அவருக்கு வழங்கினாலோ இந்த காப்பீட்டுக்கான கிளைமை நீங்கள் தாக்கல் செய்ய முடியும்.
அதற்கு முதலில் உங்களிடம் ஆக்டிவாக உள்ள வருடாந்திர Truecaller ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் இருக்க வேண்டும். அப்ளிகேஷனில் உள்ள பிரீமியம் டேப் மூலமாக உங்களுடைய ஃப்ராடு இன்சூரன்ஸ் பாலிசியை ஆக்டிவேட் செய்யுங்கள். பிரீமியம் டேப் மூலம் உங்கள் கிளைமை சமர்ப்பிக்கவும். பின்னர் உங்களுடைய கிளைம் பதிவை நிறைவு செய்வதற்கு நீங்கள் HDFC எர்கோவுக்கு திருப்பி அனுப்பப்படுவீர்கள்.
இதையும் படிக்க:
கேஸ் விலை முதல் PPF வட்டி விகிதம் வரை… அக்டோபர் மாதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்!!!
எத்தனை முறை ஒருவரால் கிளைம் தாக்கல் செய்ய முடியும்?
ஒரு வருடத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் கிளைம்களை தாக்கல் செய்யலாம். ஆனால் நீங்கள் செய்யக்கூடிய அனைத்து கிளைம்களின் மொத்த தொகை 10,000 ரூபாயை கடக்கக்கூடாது. இந்த இன்சூரன்ஸ் பெரிய அளவிலான மோசடிகளுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் அளிக்காது. எனினும் சிறிய இழப்புகளில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம்.
.