இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர உள்ள Redmi A4 5G தொலைபேசியின் விலை எவ்வளவு தெரியுமா?. முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பிரபல சீன ஸ்மார்ட் ஃபோன் நிறுவனமான சியோமி தனது Redmi A4 5G எனப்படும் ரூ.10,000-க்கு கீழ் விலை கொண்ட தனது முதல் 5G போனின் இந்திய வெளியீட்டு தேதியை சமீபத்தில் உறுதி செய்துள்ளது. சியோமி நிறுவனம் கடந்த மாதம் Indian Mobile Congress (IMC) 2024 நிகழ்வில் Qualcomm உடன் இணைந்து இந்த டிவைஸை வெளியிட்ட நிலையில், தற்போது இந்திய வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய தயாராகியுள்ளது.
Redmi A4 5G மொபைலானது நவம்பர் 20-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என சியோமி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் Redmi A4 5G மொபைலானது. மலிவு விலையில் கிடைப்பதுடன், சிறந்த அம்சங்களை கொண்ட 5ஜி மொபைலாக இருக்கும் என்பதால் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரெட்மி ஃபோனை குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட் இயக்குகிறது. இந்த ப்ராசஸரை கொண்டு வெளியாகும் முதல் மொபைல் இதுவாகும். ரூ.10,000-க்கும் கீழான பட்ஜெட்டில் தரமான 5ஜி மொபைலை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.
Also Read:
புதிய ஆடியோ Gadgets-ஐ அறிமுகப்படுத்தியுள்ள U&i நிறுவனம்.. விலை எவ்வளவு தெரியுமா?
விரைவில் விற்பனைக்கு வர உள்ள Redmi A4 5G தொலைபேசியின் விலை எவ்வளவு என்று தற்போது வரை உறுதியாக தெரியவில்லை. எனினும் ரூ.10,000-க்குள் கிடைக்கும் சிறந்த 5ஜி மொபைல் என்னும் விளம்பரம் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. சியோமி நிறுவனம் இந்த பட்ஜெட் 5ஜி மொபைலின் ஸ்பெசிஃபிகேஷன்கள் குறித்த தகவல்களை இன்றும் வெளியிடவில்லை. ஆனால், Snapdragon 4s Gen 2 ப்ராசஸர் சப்போர்ட் செய்யும் அம்சங்களை பற்றி ஏற்கனவே பலர் அறிந்திருப்பதால் வரவிருக்கும் மொபைலை பலரும் உற்சாகமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்த புதிய 5G சிப்செட் மொபைல் ஸ்கிரீனுக்கு 90Hz ரெஃப்ரஷ் ரேட் சப்போர்ட்டை வழங்குகிறது. இது யூஸர்களுக்கு ஃபுல் HD+ ரெசல்யூஷனை வழங்கும். மேலும் இந்த சிப்செட் 8ஜிபி ரேம் மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜை சப்போர்ட் செய்கிறது. இது ஆப்களை வேகமாக வேலை செய்ய அனுமதிக்கும் மற்றும் இந்த சாதனங்களில் மல்டிடாஸ்கிங் சிறப்பாக இருக்கும். இதுதவிர புதிய இந்த ஹார்ட்வேர் 40W வரையிலான சார்ஜிங் ஸ்பீடை வழங்க முடியும். இதனிடையே நிறுவனத்தால் வெளியிடப்பட்ட Redmi A4 5G டீஸர் இமேஜானது, இந்த மொபைல் பர்பிள் மற்றும் பிளாக் கலர் ஆப்ஷன்களில் புதிய மொபைல் விற்பனைக்கு வரும் என்பதை காட்டுகிறது. மேலும் இந்த மொபைல் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் கூடிய 6.88-இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
.