துணிகளைச் சுத்தமாகத் துவைத்து, காயவைத்து எடுப்பது எவ்வளவு பெரிய வேலையோ, அதை அழகாக அயர்ன் செய்து வைப்பதும் பெரிய வேலையாக உள்ளது. நினைத்துப் பாருங்கள் துணியைத் துவைக்க வாஷிங் மெஷின் இருப்பது போல, துணியை அயர்ன் செய்து அழகாக மடித்துக் கொடுக்கவும் மெஷின் இருந்தால் எப்படி இருக்கும்.

அப்படி ஒரு மெஷினை தான் இந்தியாவில் முதல்முறையாகக் கோவையில் உருவாக்கியுள்ளனர். இந்த இயந்திரம் மூலம் ஒன்று முதல் இரண்டு நிமிடத்திலேயே துணிகளை அயன் செய்வது மட்டுமில்லாமல், அந்த துணிகளை மடித்தும் கொடுக்க முடியும்.

விளம்பரம்

என்னதான் நகரங்களில் வீதிக்கு வீதி அயர்ன் செய்து தருவதற்குக் கடைகள் இருந்தாலும், அங்குக் குவிந்து கிடக்கும் துணிகளால் அவர்களால் உடனுக்குடன் துணிகளை அயர்ன் செய்து கொடுக்க இயலாது. அதனால் நீங்கள் எங்காவது டிப்டாப்பாக கிளம்ப வேண்டும் என்றால் அதற்கு முந்தைய நாளில் நீங்கள் முன்னேற்பாடாகத் துணியை அயர்ன் செய்யக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க: புரட்டாசி மாத சோமவார பிரதோஷம்… அண்ணாமலையார் கோவில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்…

அதுவே இந்த அயர்ன் செய்து மடித்துக் கொடுக்கும் இயந்திரத்தால் ஒரு மணி நேரத்திற்கு 60 முதல் 120 துணிவரை எந்தவிதச் சிரமமும் இல்லாமல் அயன் செய்து மடித்துக் கொடுக்க முடியும். இந்த மெஷின் தயாரிக்கும் நிறுவனத்தின் நிறுவனர் ஆனந்த் இதுகுறித்து கூறுகையில், “இந்தியாவிலேயே முதல்முறையாக யாரும் பண்ணிராத ஒன்றை உடன் இருக்கிறோம். அயனிங் அண்ட் போல்டிங் மிஷின், இந்தியாவில் நிறைய பேர் இதை முயன்றிருக்கிறார்கள். ஆனால் யாரும் வெளிக்கொண்டு வரவில்லை.

விளம்பரம்

நாம் எதற்காக இந்த அயனிங் அண்ட் ஆட்டோ ஃபோல்டிங் மிஷின் கொண்டு வந்திருக்கிறோம் என்றால், ஒரு ஏரியாவில் ஒருத்தர் அயனிங் செய்து கொண்டிருக்கிறார் என்றால் அவரால் 120 துணிகள் மட்டுமே ஒரு நாளைக்கு பண்ண முடியும். அவர்களிடத்தில் எப்பொழுதும் நிறைய துணிகள் நிறைந்திருக்கும். அது அவர்களுக்கு மிக சிரமமானது. அவர்கள் ஒரு மாதத்திற்கு 3000 துணி வரை தான் பண்ண முடியும். ஆனால் அவர்கள் வைத்திருப்பது 6 ஆயிரம் முதல் பத்தாயிரம் துணி வரை வைத்திருப்பார்கள்.

விளம்பரம்

ஆகையால் துணிகளை அவர்கள் சரியான நேரத்திற்குக் கொடுக்க கொடுக்க முடியாது. இதை சரி செய்யணும். நானும் நிறைய அனுபவித்திருக்கிறேன். நான் ஒரு கல்யாணத்திற்குச் செல்லும் பொழுது ஒரு செட் துணி மட்டும் தான் எடுத்துச் சென்றேன். ஆறு ஏழு கடைகள் ஏரி இறங்கி இருப்பேன். யாரும் இன்ஸ்டன்ட் ஆக கொடுப்பதாக இல்லை, அனைவரும் முடியாது என்று சொன்னார்கள்.

இதையும் படிங்க: கல்விச் செல்வம் தரும் அன்ன பிரசாதம்… பூதநாராயண பெருமாள் கோவிலில் திரளும் பக்தர்கள்…

விளம்பரம்

எனக்கு இப்பொழுது உடனே கொடுங்கள் மேற்கொண்டு ரூ.50 கூட தருகிறேன் என்று சொன்னேன். ஆனால் அவர்கள் நிறைய துணி இருக்கிறது எங்களால் முடியாது என்று சொன்னார்கள். இதுதான் என்னுடைய இன்ஸ்பிரேஷனுக்கு காரணம், இந்த மெஷின் உருவாக்கியதற்குக் காரணம்.

இப்பொழுது துணி வேண்டுமென்றால் இப்போதே கொடுத்து விடலாம். ஐந்து நிமிடத்தில் துணி கிடைக்குமா? கிடைக்கும். மூன்று நிமிடத்தில் துணி கிடைக்குமா? கிடைக்கும். அரை மணி நேரத்தில் வீட்டிற்கு கொண்டு கொடுக்க முடியுமா? முடியும். இந்த ஒரு கான்செப்டிற்காக உருவாக்கப்பட்டது தான் டாக்டர் பேப்ரிக் அயனிங் அண்ட் ஆட்டோமேட்டிக் ஃபோல்டிங் மிஷின்.

விளம்பரம்

இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு நிமிடம் அல்லது ஒன்றரை நிமிடத்தில் ஒரு முழுக்கைச் சட்டையை அயர்ன் செய்து முடித்து விடலாம். பேண்ட் என்றால் 30 நொடியில் முடித்து விடலாம். ஒரு மணி நேரத்திற்கு 60 முதல் 120 துணி வரை அயர்ன் பண்ணக்கூடிய ஒரு அற்புதமான மெஷின். சட்டை, சுடிதார், பேண்ட், புடவை எது வேண்டும் என்றாலும் இதில் அயர்ன் பண்ணிக் கொள்ளலாம்.

இதையும் படிங்க: முதுகு தண்டுவட பாதிப்பால் முடங்கும் வாழ்க்கை… ஆயிரக்கணக்கானோரை மீட்ட மறுவாழ்வு மையம்…

விளம்பரம்

இது நமது மக்களுக்குத் தேவை. அயன் பண்ணக் கொடுத்தால் காலையில் கொடுத்து மாலையில் வாங்குவது இருந்தாலும். இங்கே வந்தால் இரண்டு நிமிடங்கள் முதல் மூன்று நிமிடத்தில் நீங்கள் கொண்டுவந்த துணிகளை அயன் செய்து கொடுத்து விடலாம்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

.



Source link