செல்வமகள் சேமிப்பு திட்டம் என்று தமிழில் பெயரிடப்பட்டுள்ள சுகன்யா சம்ரிதி யோஜனா அக்கவுன்டை ஒரு தபால் நிலையத்திலிருந்து வங்கிக்கு மாற்றி விடுவதன் மூலமாக உங்களுக்கு பல சௌகரியங்கள் கிடைக்கும். சிறந்த சேவைகளாக இருக்கட்டும். அக்கவுண்டை எளிதில் பயன்படுத்துவதற்காக இருக்கட்டும் உங்களுடைய SSY அக்கவுண்ட்டை ட்ரான்ஸ்ஃபர் செய்வது ஒரு எளிமையான செயல்முறை. அதற்கான வழிகாட்டுதலை இந்த பதிவில் பார்க்கலாம்.
உங்களுடைய SSY அக்கவுண்ட்டை ஏன் டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும்?
பொதுவாக வங்கிகளில் அதிக கிளைகள் மற்றும் ATM வசதிகள் இருப்பதால் உங்களுடைய டெபாசிட்கள் மற்றும் அக்கவுண்ட்டை மேனேஜ் செய்வதற்கு இது எளிதாக இருக்கும். மேலும் பல வங்கிகள் SSY அக்கவுண்டுகளுக்கு ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் வசதிகளை தருகின்றன. இதனால் உங்களுடைய பேலன்ஸ் மற்றும் ஸ்டேட்மெண்டை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். வங்கிகள் பொதுவாக தபால் நிலையங்கள் உடன் ஒப்பிடும்போது விரைவான பதில்கள் மற்றும் கூடுதல் சேவைகளை வழங்குகின்றன.
SSY அக்கவுண்ட்டை தபால் நிலையத்திலிருந்து வங்கிக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்வதற்கான வழிமுறை
◆முதலில் நீங்கள் SSY அக்கவுண்ட் வைத்திருக்கும் தபால் நிலையத்திற்கு செல்லுங்கள். அங்கு செல்லும்பொழுது உங்களுடைய SSY அக்கவுண்ட் பாஸ்புக், ஆதார் கார்டு, PAN கார்டு போன்ற KYC டாக்குமென்ட்கள் மற்றும் தபால் நிலையத்தில் டிரான்ஸ்ஃபருக்காக எழுத்துப்பூர்வமாக கிடைக்கும் ஒரு கோரிக்கை படிவம் இவற்றை கொடுத்துவிட்டு எந்த வங்கிக்கு நீங்கள் மாற்ற இருக்கிறீர்கள் என்பதை தபால் நிலையத்தில் உள்ள ஊழியரிடம் தெரிவிக்கவும்.
◆டிரான்ஸ்ஃபர் கோரிக்கை படிவத்தை நிரப்பி உங்களுடைய பாஸ்புக் மற்றும் தேவையான டாக்குமென்ட்களை கொடுத்து, செயல் முறையை நிறைவு செய்யவும்.
◆நீங்கள் வழங்கிய ஆவணங்களை சரி பார்த்து விட்டு அங்கீகரிக்கப்பட்ட அக்கவுண்ட் திறப்பு படிவத்திற்கான ஒரு நகல், உங்களுடைய ஸ்பெசிமேன் சிக்னேச்சர் அட்டை, அக்கவுண்ட் ஸ்டேட்மென்ட், உங்களுடைய SSY அக்கவுண்டில் உள்ள பேலன்ஸ் தொகைக்கான செக் அல்லது DD ஆகியவற்றை தபால் நிலையம் தயார் செய்யும்.
◆இந்த டாக்குமெண்ட்களோடு ஒரு டிரான்ஸ்ஃபர் கடிதத்தையும் நீங்கள் தேர்வு செய்த வங்கிக் கிளைக்கு தபால் நிலையம் அனுப்பி வைக்கும்.
◆உங்களுடைய கோரிக்கையை தபால் நிலையம் ப்ராசஸ் செய்தவுடன் அவர்கள் வங்கியில் சமர்ப்பிக்கும் படி உங்களிடம் ஒரு சில டாக்குமென்ட்களை வழங்குவார்கள்.
◆அடுத்ததாக உங்களுடைய அக்கவுண்ட்டை டிரான்ஸ்ஃபர் செய்ய நினைக்கும் வங்கி கிளைக்கு செல்ல வேண்டும். அங்கு தேவையான KYC டாக்குமென்ட்கள், சமீபத்திய ஒரு புகைப்படம் ஆகியவற்றை வழங்குங்கள்.
◆வங்கி இந்த டாக்குமென்ட்களை சரிபார்த்துவிட்டு உங்களுடைய கோரிக்கையை ப்ராசஸ் செய்யும். டிரான்ஸ்பர் செயல்முறை நிறைவு பெற்றவுடன் வங்கி உங்களுக்கு அப்டேட் செய்யப்பட்ட அக்கவுண்ட் விபரங்கள் மற்றும் டிரான்ஸ்பர் செய்யப்பட்ட பேலன்ஸ் உடன் புதிய SSY பாஸ்புக்கை வழங்கும்.
◆இப்போது நீங்கள் வங்கியில் கிடைக்கக்கூடிய வசதிகளை பயன்படுத்தி SSY அக்கவுண்ட்டை எளிதாக நிர்வாகிக்கலாம்.
டிரான்ஸ்ஃபர் செயல்முறையை சுமூகமாக்க உதவும் சில குறிப்புகள்
◆ஒரு சில தபால் நிலையங்கள் இந்த டிரான்ஸ்ஃபர் செயல்முறைக்கு சிறிய அளவு கட்டணத்தை வசூல் செய்யலாம். இது பொதுவாக 100 ரூபாய் இருக்க வாய்ப்புள்ளது.
◆நீங்கள் சமர்ப்பித்த அனைத்து டாக்குமெண்ட்களின் நகல்களையும் எதிர்கால தேவைக்கு பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது அவசியம்.
◆டிரான்ஸ்ஃபர் செயல்முறை நிறைவடைவதற்கு ஒரு சில வாரங்கள் ஆகலாம். எனவே டெபாசிட்களை செய்வதற்கு முன்னரே இந்த டிரான்ஸ்ஃபர் செயல்முறையை ஆரம்பிப்பது அவசியம்.
◆வங்கியில் SSY அக்கவுண்டிற்கான ஆன்லைன் சேவைகள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம்.
.