முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம், அவர் இறந்து ஐந்து மாதங்களின் பின்னர் நீதித்துறை, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சிடம் நேற்று (02) கையளிக்கப்பட்டுள்ளது.
அன்னார் சம்பந்தனின் உத்தியோகபூர்வ அரச இல்லத்தை கையளிப்பதற்கு, அமைச்சு ஐந்துக்கும் மேற்பட்ட நினைவூட்டல்களை வழங்கியிருந்ததாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
கொழும்பு 7, மலலசேகர மாவத்தையிலுள்ள இந்த உத்தியோகபூர்வ இல்லம் சம்பந்தனுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
பின்னர், நல்லாட்சி அரசாங்கத்தின்போது 2019 பெப்ரவரி 26 ஆம் திகதி, முன்னாள் அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கமைய, சம்பந்தன் உயிருடன் இருக்கும் வரைக்கும் இந்த இல்லத்தை பயன்படுத்திக்கொள்ளவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த உத்தியோகபூர்வ இல்லம், டிசம்பர் 12ஆம் திகதி அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என சம்பந்தனின் மகள் எழுத்து மூலம் அமைச்சுக்கு அறிவித்திருந்தபோதிலும், நேற்று (02) கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post சம்பந்தன் இறந்து ஐந்து மாதங்களின் பின் அரச இல்லம் நேற்று மீள கையளிப்பு appeared first on Thinakaran.