தற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதனால், தேங்காயின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா வரை உயர்ந்துள்ளது.
சந்தையில் அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர். அதன்படி, மக்கள் அதிகமாக உட்கொள்ளும் நாடு மற்றும் கச்சா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், சில்லறை அரிசி விற்பனைக்காக அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையையும் விட அரிசியின் மொத்த விலை அதிகரித்துள்ளதாக, ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், அரிசி தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு 70,000 மெற்றிக்தொன் நாடு அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்திருந்தது. அதற்கான விலை மனுக் கோரல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகப் பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
The post நாட்டில் தேங்காய் விலை சடுதியாக அதிகரிப்பு appeared first on Thinakaran.