வேலைவாய்ப்பு சந்தை நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆகையால் நம் குழந்தைகளுக்கான நிதித் திட்டமிடலுக்கான அணுகுமுறையும் மாற வேண்டும். குழந்தைகளின் திறமையை வளர்ப்பதில் முதலீடு செய்வது வேலைவாய்ப்பை அதிகரிப்பதோடு மட்டுமின்றி, முதலீட்டிற்கான வருவாயையும் விரைவாக வழங்குகிறது.
கல்லூரி டிகிரி தேவைதான்; ஆனால் திறன்கள்தான் இன்றைக்கு முக்கியம்
கல்லூரி பட்டப்படிப்பு என்பது நிலையான வாழ்க்கைக்கான தங்கச் சீட்டு என்றாலும் பாரம்பரிய தகுதிகளைத் தாண்டி கோடிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங், தரவு பகுப்பாய்வு (டேட்டா அனலிடிக்ஸ்) மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் நிறுவனங்கள் திறமைகளைத் தேடுகின்றன. வேலைவாய்ப்பு சந்தையில் தனித்து நிற்க கல்லூரிப் பட்டம் மட்டும் போதாது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.
நாம் செலவழிக்கும் தொகையின் அடிப்படையில் பார்த்தாலும் திறன் அடிப்படையிலான கற்றல், முழு அளவிலான பட்டப்படிப்பைக் காட்டிலும் விரைவாகவும், செலவு குறைந்ததாகவும் இருக்கும். கல்லூரிப் பட்டப்படிப்புக்கான பலன்களுக்காக காத்திருப்பதற்கு பல ஆண்டுகளும், பெரும் தொகையும் செலவழிப்பதற்குப் பதிலாக, திறன் பயிற்சி சில மாதங்களிலேயே லாபகரமான வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கும்.
உங்கள் குழந்தையின் கல்வி நிதியில் ஒரு பகுதியை கோடிங் அல்லது டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்புக்கு ஒதுக்குவதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இது ஒப்பீட்டளவில் குறைந்த ரிஸ்க்கான, குறுகிய கால முதலீடு மட்டுமல்ல; முதலாளிகள் விரும்பும் சந்தைக்கு தயாரான திறன்களையும் உங்கள் குழந்தைக்கு வழங்குகிறது.
சரியான சமநிலையை உருவாக்குதல்:
உங்களிடம் இரண்டும் இருக்கும்போது, கல்லூரி நிதி மற்றும் திறன்களுக்கான நிதி ஆகியவற்றிற்கு இடையே ஏன் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்? நீங்கள் ஒரு “ஹைபிரிட்” மாதிரியை தேர்ந்தெடுங்கள். இது ஒரு பாரம்பரிய கல்லூரி பட்டபடிப்பு செலவோடு திறன் அடிப்படையிலான நிதியின் நெகிழ்வுத் தன்மையை உருவாக்குகிறது.
இந்த உத்தி உங்கள் ஒட்டுமொத்த சேமிப்பில், தோராயமாக 10-15 சதவிகிதத்தை திறன்-வளர்ப்புத் திட்டங்களுக்கு ஒதுக்குங்கள். டேட்டா அனலிட்டிக்ஸ் படிப்புக்காக ரூ.1 லட்சம் ஒதுக்கினால், சில மாதங்களிலேயே லாபகரமான இன்டர்ன்ஷிப் அல்லது நுழைவு நிலை வேலைகளுக்கு வழிவகுக்கும். மீதமுள்ள கல்வி நிதியானது பாரம்பரிய பல்கலைக்கழக பட்டங்களுக்கு செலவழிக்கலாம்.
இதையும் படிக்க:
sukanya samriddhi yojana scheme : செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இவ்வளவு பிளஸ் பாயிண்ட் இருக்கா..? முழு விவரம்!
எல்லா திறன்களும் சமமாக உருவாக்கப்படுவதில்லை. சில தொழில்கள் அதிக வருமானம், அதிக ஸ்திரத்தன்மை மற்றும் விரைவான முன்னேற்றத்தை வழங்குகின்றன. செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு, டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் தரவு அறிவியல் போன்ற துறைகள் அதிவேகமாக வளர்ந்து வருகின்றன. பெற்றோருக்கு இது அதிக மதிப்புள்ள முதலீடாக தெரிகிறது. ஏனெனில் இந்தத் திறன்கள் பொருளாதாரச் சரிவுகளிலிருந்து மீளும் தன்மையுடையவை என்றும், இது எதிர்காலத்திற்கான திறன் என்பதால் வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்படும் இடையூறுகளால் இதற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் பெற்றோர்களுக்கு தெரிய வேண்டும்.
திறன்களை ஆய்வு செய்யுங்கள்: முதலில் தற்போது அதிகம் தேவையுள்ள திறன்கள் எதுவென்று ஆராயுங்கள். செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் தரவு அறிவியல் போன்ற எதிர்கால வேலைப்போக்குகளுடன் ஒத்துப்போவதைத் தேடுங்கள். நடைமுறைப் பயிற்சி மற்றும் சான்றிதழை வழங்குவதில் கவனம் செலுத்தி, முதலீட்டில் நிரூபிக்கப்பட்ட வருமானத்துடன் கூடிய படிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் நிதித் திட்டத்தை மேம்படுத்தவும்: உங்கள் கல்விச் சேமிப்பில் ஒரு பகுதியை திறன் அடிப்படையிலான கற்றலுக்கு ஒதுக்குங்கள். தேவைக்கேற்ப சரிசெய்ய உங்களுக்கு இடமளிக்கும் மிதமான ஒதுக்கீடாக இது இருக்க வேண்டும்.
இதையும் படிக்க:
ரூ.3,600 கோடி சொத்து மதிப்பு.. இந்த 21 வயது இளம் கோடீஸ்வரர் பற்றி தெரியுமா?
சுறுசுறுப்புடன் ஸ்திரத்தன்மையை சேர்க்கவும்: பாரம்பரியக் கல்வி நிதிகள் நீண்ட கால நிலைத்தன்மையை வழங்குகின்றன. அதே சமயம் திறன் அடிப்படையிலான முதலீடுகள் குறுகிய கால வாழ்க்கைத் தயார்நிலையை வழங்குகின்றன. சந்தை தேவைகளுக்கு ஏற்றவாறு உறுதியான கல்வி அடித்தளத்தை உறுதிசெய்து, இரண்டையும் அதிகப்படுத்தும் சமநிலையை உருவாக்கவும்.
அப்டேட்டாக இருங்கள்: வளர்ந்து வரும் வேலைப்போக்குகளை கவனியுங்கள். உங்கள் பிள்ளையின் திறன்களை தொழில்துறை மாற்றங்களுக்குப் பொருத்தமானதாகவும், எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யுமாறும் இருக்கும் திறன்களில் நிதியை ஒதுக்கீடு செய்யுங்கள்.
வருவாயை மட்டும் பார்க்காதீர்கள்: திறன் அடிப்படையிலான கற்றல் என்பது பணத்தைப் பற்றியது மட்டுமல்ல. இதிலுள்ள கண்ணுக்குத் தெரியாத பலன்களை கவனியுங்கள்: விடாமுயற்சி, தகவமைப்பு, நம்பிக்கை மற்றும் சுயாதீனமாக கற்றுக் கொள்ளும் திறன் என இன்றைய வேகமான பொருளாதாரத்தில் வெற்றிக்கு முக்கியமான அனைத்துப் பண்புகளும் உங்கள் குழந்தைக்கு கிடைக்கும்.
.