திருகோணமலையில் 30 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் மூடப்பட்டிருந்த வீதியொன்று பொதுமக்கள் பாவனைக்காக நேற்று (02) திறந்து வைக்கப்பட்டுள்ளது. உவர்மலை 22 ஆம் படைப்பிரிவின் இராணுவப் படைத் தளத்தினை அண்மித்த வீதியின் ஒரு பகுதியே இவ்வாறு திறந்து விடப்பட்டுள்ளது.
ஆளுநர் அலுவலக வீதி வழியாக, 22 ஆம் படைப்பிரிவின் இராணுவ நூதனசாலையின் வாயிலிலிருந்து உவர்மலை மத்திய வீதியினை அடையக்கூடியதாக அமைந்துள்ள இந்த வீதி, கடந்த மூன்று தசாப்த காலமாக பொதுமக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்படாது வீதித்தடைகள் போடப்பட்டிருந்தது. உவர்மலை பகுதியின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள 22 ஆம் படைப்பிரிவினை அடைவதற்கு மூன்று வீதிகள் காணப்படுகின்றன. எனினும் அவ் வீதிகளூடான மக்கள் போக்குவரத்தானது சில பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் 34 வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதியொன்று அண்மையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
The post முப்பது வருடங்களின் பின்னர் திருமலையில் திறந்து வைப்பு! appeared first on Thinakaran.