சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அதன் சமீபத்திய M சீரிஸ் மிட்-பட்ஜெட் ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி M55s 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சாம்சங் கேலக்ஸி M55s 5G ஸ்மார்ட்போனானது ரியர் பேனலில் டூயல் டெக்ஸ்ச்சர்ட் ஃபினிஷ் கொண்ட பியூஸின் டிசைனை கொண்டுள்ளது.

இதன் முக்கிய சிறப்பம்சங்களாக ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 1 சிப்செட், 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா யூனிட், 50 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் மற்றும் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரக் குறிப்புகள் பற்றி விரிவாக பார்ப்போம்.

விளம்பரம்

சாம்சங் கேலக்ஸி M55s 5G இந்தியாவின் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி M55s 5G ஸ்மார்ட்போன் ஆனது கோரல் கிரீன் மற்றும் தண்டர் பிளாக் ஆகிய இரண்டு வண்ண வகைகளில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் 8ஜிபி + 128ஜிபி வேரியன்ட் ரூ.19,999 விலையில் கிடைக்கிறது மற்றும் 8ஜிபி + 256ஜிபி வேரியன்ட் ரூ.22,999 விலையில் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி M55s 5G ஸ்மார்ட்போன் அமேசான், சாம்சங் இந்தியா இணையதளம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்களில் வாங்கலாம். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 வங்கி தள்ளுபடி சலுகையும் உள்ளது.

விளம்பரம்
பிக் பாஸ் 8வது சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார், யார்? லிஸ்ட் இதோ


பிக் பாஸ் 8வது சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார், யார்? லிஸ்ட் இதோ

சாம்சங் கேலக்ஸி M55s 5G அம்சங்கள்:

சாம்சங் கேலக்ஸி M55s 5G ஸ்மார்ட்போன் ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.7-இன்ச் முழு-HD+ AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 1 SoC மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக 256 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு வசதியும் கொண்டுள்ளது

ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்(OIS) கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோகால் அழைப்புகளுக்காக 50எம்பி பிரன்ட் கேமரா கொண்டுள்ளது.

விளம்பரம்

இதையும் படியுங்கள் :
முதல் 55 இன்ச் ஃபயர் ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்திய சியோமி! – விலை எவ்வளவு தெரியுமா?

மேலும், இந்த சாம்சங் கேலக்ஸி M55s 5G ஸ்மார்ட்போன் ஆனது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். கூடுதலாக, இது சாம்சங்கின் நாக்ஸ் வால்ட் செக்யூரிட்டி மற்றும் மேம்பட்ட பாதுகாப்பிற்கான இன்-டிஸ்ப்ளே பிங்கர்பிரிண்ட் சென்சார் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

விளம்பரம்

.



Source link