புதிய மாடல்கள், புதுப்பிக்கப்பட்ட எலக்ட்ரிக் வாகன கொள்கைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு ஆகியவற்றின் காரணமாக எலக்ட்ரிக் வாகன (EV) சந்தை இந்தியாவில் சீராக வளர்ந்து வருகிறது.

சமீபத்தில், டாடா (Tata) மற்றும் எம்ஜி (MG) போன்ற வாகன உற்பத்தியாளர்கள் புதிய எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில் BYD மற்றும் கியா (Kia) போன்ற நிறுவனங்களும் வரவிருக்கும் பண்டிகை காலத்திற்கு முன்னதாக, முறையே eMax 7 மற்றும் EV9 ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன.

விளம்பரம்

டாடா கர்வ்வ் EV (Tata Curvv EV)

ஆகஸ்ட் 2024-ல் அறிமுகப்படுத்தப்பட்ட Tata Curvv EV காரின் விலை ரூ.17.49 லட்சம் முதல் ரூ.21.99 லட்சம் வரையில் உள்ளது. இந்த எலக்ட்ரிக் கார் 45kWh மற்றும் 55kWh என்ற இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் மற்றும் ஐந்து டிரிம்கள் மாடல்களில் வருகிறது. சிறிய பேட்டரி 502 கி.மீ தூரம் வரையிலான ரேஞ்சை வழங்குகிறது. பெரியது ஒருமுறை சார்ஜ் செய்தால் 585 கி.மீ வரை செல்லும். இது விரைவாக சார்ஜ் ஏறுவதால், 15 நிமிடங்களில் 150 கி.மீ செல்ல முடியும். 70kW சார்ஜரைப் பயன்படுத்தி 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 40 நிமிடங்கள் ஆகும்.

விளம்பரம்

இதையும் படிக்க:
ஒருநாளைக்கு எத்தனை முறை செல்ஃபோனை சார்ஜ் செய்யலாம்? பலருக்கும் தெரியாத தகவல்

எம்ஜி வின்ட்சர் EV (MG Windsor EV)

இந்த புதிய எலக்ட்ரிக் காரின் முன்பதிவு அக்டோபர் 3-ம் தேதி தொடங்கும் என்றும், அக்டோபர் 12 ஆம் தேதி முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும் என்றும் கார் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. எலக்ட்ரிக் CUV (நிலையான பேட்டரி பேக் உடன்) காரான இதன் விலை ரூ.13.50 லட்சம் முதல் ரூ.15.50 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மூன்று டிரிம்களில் வருகிறது. 38kWh பேட்டரி திறனுள்ள இந்தக் கார் 331 கி.மீ ரேஞ்ச் வழங்குகிறது.

விளம்பரம்

BYD eMax 7

BYD eMax 7 எலக்ட்ரிக் MPV காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே நாடு முழுவதும் தொடங்கப்பட்டுவிட்டன. இந்தக் காரின் விலை குறித்த அறிவிப்பு அக்டோபர் 8, 2024 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இது 71.8kWh பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 530 கிமீ தூரம் வரை செல்லும் என்று கூறப்படுகிறது. இது e6 மாடலின் பெரிதும் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாகும்.

இதையும் படிக்க: 
மொபைலில் இந்த சிறிய துளை இருப்பது ஏன் தெரியுமா? 99% பேருக்கு தெரியாது

விளம்பரம்

கியா EV9 (Kia EV9)

Kia EV9 எலக்ட்ரிக் கார் அக்டோபர் 3-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. Kia EV9 காரில் 99.8kWh பேட்டரி மற்றும் AWD சிஸ்டம் உள்ளது. இந்தக் காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 561 கிமீ தூரம் வரை வழங்குகிறது. 384 bhp பவர் மற்றும் 700 Nm இழுவிசையை உருவாக்க போதுமான இரட்டை மின்சார மோட்டார் அமைப்பு இந்தக் காரில் உள்ளது. கியா EV9 காரின் விலை ரூ.1 கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

.



Source link