இஸ்ரேல் – ஹமாஸ் என துவங்கிய போர், பிறகு இஸ்ரேல் – ஹிஸ்புல்லா என வளர்ந்து தற்போது இஸ்ரேல் – இரான் இடையேயான போர் அளவிற்கு வந்துள்ளது.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் நேற்று (1ம் தேதி) துப்பாக்கி சூடு நடத்தினர். அவர்களை இஸ்ரேல் காவல்துறை சுட்டுக்கொன்றது. இந்த நிகழ்வு நடந்து முடிந்த ஓரிரு நிமிடத்தில் இஸ்ரேல் வான் முழுவதும் எரிக்கற்கள் வந்துவிழுவது போல் தீப்பிழம்புகள் தெரிந்தன. அதேசமயம், இஸ்ரேலில் அபாய ஒலியும் ஒலித்தது. நிலமையை புரிந்த இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓட்டம் எடுத்தனர்.

விளம்பரம்

எரிக்கற்கலை போல் வந்து விழுந்தது ஈரான் நாட்டில் இருந்து பறந்து வந்த ஏவுகணைகள். 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான், இஸ்ரேல் மீது ஏவியது. இதில், இஸ்ரேலின் பாதுகாப்பு கவசமான அயண்டோம் தடுத்து அழித்தது என்று இஸ்ரேல் கூறுகிறது. அதேசமயம், ஏவுகணைகள் இலக்கை எட்டியதாக ஈரான் கூறுகிறது.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக தங்களது ராணுவ வீரர்களை இருக்குமாறு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உடனடியாக உத்தரவிட்டார்.

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டத்தைத் தொடர்ந்து ஈரான் நாட்டின் உயரிய தலைவரான கமேனி தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், இஸ்ரேலின் ஹீப்ரு மொழியில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “இந்தத் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தினால், அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். போரை எதிர்கொள்ளவும் அஞ்சமாட்டோம். தேய்ந்துபோன யூத ஆட்சியில், இந்த அடி வலுவானதாகவும், அதிக வலி தரும் படியாகவும் இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

விளம்பரம்

ஈரானின் தாக்குதலுக்கும் எச்சரிக்கைக்கும் பதில் கொடுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “ஈரான் பெரிய தவறைச் செய்துவிட்டது. அதற்கான விலையை அவர்கள் கொடுத்தே தீர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் :
கட்சியை அறிமுகம் செய்த பிரசாந்த் கிஷோர்! முதல் பேச்சிலேயே தமிழ்நாடு பற்றி விமர்சனம்

இந்நிலையில், ஈரானின் உளவுத்துறை அமைச்சகம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொல்லப்போவதாக ஹீப்ரு மொழியில் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், அந்த எச்சரிக்கையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பின் தலைவர்களையும் கொல்வோம் என்றும், நெதன்யாகு உட்பட பலரின் பெயரை, பயங்கரவாதிகள் எனவும் பட்டியலிட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.

விளம்பரம்

.



Source link