இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாலஸ்தீனத்தின் ஆயுதக்குழுவான ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிப்பதாக சபதம் எடுத்து பாலஸ்தீனத்தின் மீது தொடர் தாக்குதல் நடத்தி வந்தது. இந்தத் தொடர் தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 40,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் ஒருபுறம் நடந்துவரும் வேளையில், ஈரான் ஹமாஸுக்கு உதவு வகையில் செயல்பட்டுவருகிறது என இஸ்ரேல் குற்றச்சாட்டை முன்வைத்தது. ஒரு கட்டத்தில், சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழித்தாக்குல் நடத்தியது. இதில், ஈரானை சேர்ந்த 2 அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழந்ததால், ஈரான் கடுங்கோபம் அடைந்தது.

விளம்பரம்

தொடர்ந்து ஈரானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா அமைப்பின் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்டவை ஒரே நேரத்தில் அடுத்தடுத்து வெடித்து இதில் ஹிஸ்புல்லாவைச் சேர்ந்த சிலர் பலியாகினர். இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என ஹிஸ்புல்லா குற்றம்சாட்டியது. இந்த பதற்றம் அடங்குவதற்குள், ஈரான் மீது வான் வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவரான ஹசன் நஸரல்லாவை கொன்றது. இதனால், ஈரான் நேற்று இரஸ்ரேல் மீது 184 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

விளம்பரம்

இதில், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்ய அமெரிக்கா பயன்படுத்தும் முக்கிய விமானத்தளமான நெவாடிம் தளம், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸரல்லாவை கொல்வதற்கு பிரதான காரணமாக இருந்த ஹாட்ஜெரிம் என்ற விமானப்படை தளம், உலகின் சக்திவாய்ந்த உளவு அமைப்பாக கருதப்படும் மொசாட் தலைமையகம் உள்ளிட்டவை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. அதேசமயம், இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்தவுடன் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுக்கு உதவவும், ஈரானின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தவும் அமெரிக்க வீரர்களுக்கு உத்தரவிட்டார். தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா வெளிப்படையான தனது ஆதரவை வழங்கியிருக்கும் சூழலில், ஈரானுக்கு ரஷ்யா தனது ஆதரவை வழங்கியிருக்கிறது.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு வன்மையான கண்டனம். உடனடியாக இஸ்ரேல், லெபனானில் உள்ள தனது படைகளை திரும்ப பெற வேண்டும். இந்த பகைமை மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் இறப்புகளை அதிகரிக்க செய்யும். எனவே, அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

விளம்பரம்

இதையும் படியுங்கள் :
இஸ்ரேல் vs ஈரான்.. யாரிடம் ராணுவம் பலம் அதிகம் தெரியுமா..?

ஆயுதமேந்திய ஆக்கிரமிப்புக்கு உள்ளான நட்பு லெபனானின் தலைமை மற்றும் மக்களுடன் நாங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக பகிரங்கமாக அமெரிக்கா தனது ராணுவதை உதவுவதற்கு உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா கருத்து தெரிவித்திருப்பது இன்னும் பதட்டத்தை அதிகரித்துள்ளது.

.



Source link