ஈரான் ஏவிய ஏவுகணைகளை இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பான அயன் டூம் நடுவானில் சுட்டு வீழ்த்தின.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரை குறிவைத்து ஈரான் ராணுவம் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி நேற்று இரவு தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதலைத் தொடங்கியதும், ஏவுகணை தாக்குதலைக் குறிக்கும் வகையில் இஸ்ரேலில் சைரன்கள் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகும்படி அறிவுறுத்தப்பட்டனர். அடுத்த அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் அங்கிருந்து வெளியே வரவேண்டாம் என்று இஸ்ரேல் ராணுவம் கேட்டுக் கொண்டது. இதையடுத்து அங்குள்ள லட்சக்கணக்கான பொதுமக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்தனர்.

விளம்பரம்

அதேநேரத்தில் இஸ்ரேல் ராணுவம் தற்காப்பு நடவடிக்கையில் இறங்கியது. ஈரான் ஏவிய ஏவுகணைகளை இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பான அயன் டூம் நடுவானில் சுட்டு வீழ்த்தின.

பெரும்பாலான ஏவுகணைகள் வானிலேயே அழிக்கப்பட்ட நிலையில் ஒரு சில ஏவுகணைகள் இலக்கைத் தாக்கி அழித்ததாகத் தெரிகிறது.

மேலும் இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய ஏவுகணைகளை அமெரிக்கா கடற்படையினர் நடுவானில் தடுத்து அழித்தனர். இஸ்ரேல் கடற்பரப்பில் நிலை நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் இரண்டு கடற்படை கப்பல்கள் ஈரான் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது. மேலும் வெள்ளை மாளிகையில் இருந்தபடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போர் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் குதித்ததால் மூன்றாம் உலகப் போர் அபாயம் எழுந்துள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
ஈரான் மிகப்பெரிய தவறிழைத்து விட்டது; அதற்கு உரிய விலையை கொடுக்க நேரிடும் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ள ஈரான், பதில் தாக்குதல் நடத்தினால் அந்நாட்டையே அழிக்கும் விதமாக பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இந்நிலையில், ஈரானின் தாக்குதல் தோல்வியடைந்துவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

.



Source link