வடமேற்கு சீனாவில் பெண் ஒருவர், தனது இரு கருப்பைகள் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த அரிய நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு அரிய மருத்துவ நிகழ்வு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருப்பை டிடெல்ஃபிஸ் (uterus didelphys) எனப்படும் இந்த நிலை உலகளவில் 0.3% பெண்களுக்கு மட்டுமே ஏற்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். வடமேற்கு சீனாவில், ‘லி’ என்ற குடும்பப்பெயர் கொண்ட அந்த பெண், எட்டரை மாத கர்ப்பிணியாக இருந்தபோது, செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தையைப் பெற்றெடுத்து உள்ளார்.
Also Read:
சிம் கார்டு வாங்க இன்று முதல் புதிய விதிகள் அறிமுகம்.. என்னென்ன தெரியுமா? – முழு விவரம்!
இரு கருப்பைகளில் பிறந்த இரட்டை குழந்தைகள்
அதில் ஆண் குழந்தை 3.3 கிலோ எடையும், பெண் குழந்தை 2.4 கிலோ எடையுடனும் பிறந்துள்ளது. இந்நிலையில், இது ஒரு அரிய நிகழ்வு என்றும், சீனா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இதுபோன்ற இரு நிகழ்வுகளை மட்டுமே கேள்விப்பட்டிருப்பதாகவும் மூத்த மகப்பேறு மருத்துவர் காய் யிங் (Cai Ying) தெரிவித்து உள்ளார்.
தற்போது இரு கருப்பைகள் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த அப்பெண்ணுக்கு, முந்தையை கர்ப்பத்தின்போது 27 வாரங்களில் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அப்பெண் ஜனவரி மாதம் மீண்டும் கர்ப்பமானார்.
அபாயத்தை குறைக்க, அப்பெண்ணுக்கு தற்போது சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில், இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த அப்பெண், நான்கு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார்.
.