விவோவின் புதிய விவோ வி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. மீடியா டெக் டைமண்ட்சிட்டி சிப்செட் மற்றும் 1.5K அளவிலான ரெசல்யூஷன் கொண்ட 5ஜி அமோலெட் திரை ஆகிய சிறப்பம்சங்களை கொண்ட அல்ட்ரா ஸ்மார்ட்போனாக இது வெளிவந்துள்ளது. மேலும் அதிக அளவு பேட்டரி திறனுடன் எடை மிகவும் குறைவாகவும் உள்ளது.
விவோ டி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடல் 31,999 ரூபாய்க்கும், 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் 33,999 ரூபாய்க்கும், 12 ஜிபி + 256ஜிபி வெர்சன் 35,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.. Flipkart-ல் இந்த ஸ்மார்ட் போனை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்து கொள்ளலாம் மேலும் விவோ வின் ஈ ஸ்டோர் மூலமாகவும், ரீடெயில் கடைகளிலும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் வசதிகளை பொருத்தவரை 6.78-இன்ச் கொண்ட திரை இதில் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றை தவிர 120 ரெஃபரேஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 452 ppi பிக்சல் டென்சிட்டி கொண்ட 1.5k கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. மல்டிமீடியா அதிகம் உபயோகிப்பவர்களுக்கு இந்த போன் ஒரு வரபிரசாதமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இவற்றுடன் மீடியா டெக் டைமண்ட்சிட்டி 9200+ சிப் செட்மற்றும் 256 ஜிபி ufs 3.1 ஸ்டோரேஜ் கொண்டுள்ளதால் போன் அதிக திறனுடன் இயங்கும். இதே ப்ராசசர் தான் விவோ வி40 ப்ரோவிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கேமராவை பொறுத்தவரையில், டூயல் ரியர் கேமரா செட் அப்பை இது கொண்டுள்ளது. 50MP திறன் கொண்ட சோனி IMX921 பிரைமரி சென்சார் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆட்டோ ஃபோக்கஸ் மற்றும் OIS சப்போர்ட் உள்ளது. மேலும் 8எம்பி அளவுடைய வைட் ஆங்கிள் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோ கால்களுக்காக 50 மெகாபிக்சல் திறன் கொண்ட ஆட்டோ போக்கஸ் வசதி கொண்ட முன்பக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் உள்ள ஆரா பிளாஷ் லைட் வசதியானது வெளிச்சம் குறைவான பகுதிகளிலும் தெளிவான போட்டோக்கள் எடுக்க உதவுகிறது.
Also Read |
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!
இவற்றைத் தவிர ப்ளூடூத் 5.3, 5ஜி, ஜிபிஎஸ், எஃப் எம் ரேடியோ, க்லோனஸ், வைஃபை, யுஎஸ்பி டைப் சி போர்ட் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. மேலும் அதிகம் கேம் விளையாடுபவர்களுக்கு வசதியாக 4200 ஸ்கொயர் மில்லி மீட்டர் உடைய வீசி கூலிங் சிஸ்டம் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் அதிகம் வெப்பமடைவது தடுக்கப்படும். இவற்றை தவிர தூசி மற்றும் நீரிலிருந்து பாதுக்காக்க ஐபி 68 பாதுகாப்பை கொண்டுள்ளது. இதன் பேட்டரியை பொருத்தவரை 5,500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.
.