இது கார்த்திகை மாதம் என்பதால் திருமண சீசன் களைகட்டி வருகிறது. பலர் தங்களுடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் திருமணத்திற்கான திட்டமிடலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த சீசனில் தற்போது ஒரு புதுவித மோசடியை மோசடிக்காரர்கள் கண்டுபிடித்து அரங்கேற்றி வருகின்றனர். திருமண மோசடிகள் என்பது தற்போது அதிகமாக நடைபெற்று வருகின்றன.
மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை திருடுவது அல்லது அவர்களுடைய தனி நபர் விவரங்களை பெற்று அதன் மூலமாக பணத்தை சம்பாதிக்கின்றனர். வாட்ஸ்அப் மூலமாக போட்டோக்களை அனுப்புவது மற்றும் பணத்தை அனுப்புவது கூட மிகவும் எளிதாகிவிட்டது பற்றி பலர் பேசுகின்றனர். ஆனால் இந்த மெசேஜிங் அப்ளிகேஷன் தற்போது மோசடிக்கான மூலமாக அமைந்து வருகிறது.
திருமண பத்திரிகை மோசடிகள்
ஒரு சில திருமண பத்திரிகைகள் போலியானவை மற்றும் மால்வேர் கொண்டு உங்களுடைய சாதனத்தை ஹேக் செய்யக்கூடியவை என்று சொன்னால் நம்புவீர்களா?… ஆம், அதுதான் தற்போது நடந்துவரும் திருமண பத்திரிக்கை மோசடி. இது சமீபத்திய சில வாரங்களாகவே நடந்து வருகிறது. இது மாதிரியான பல நிகழ்வுகள் மற்றும் வழக்குகள் பற்றிய செய்திகள் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டு வருகின்றன. எனவே இது குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வாட்ஸ்அப் மூலம் வரும் எந்த ஒரு திருமண பத்திரிகைகளுக்கும் நாம் இரையாகி விடக்கூடாது. இந்த மோசடியில் வாட்ஸ்அப் மூலமாக PDF வடிவத்தில் திருமண பத்திரிகைகள் மால்வேர் புகுத்தப்பட்டு அனுப்பப்படுகின்றன. அந்த ஃபைலை நீங்கள் கிளிக் செய்தவுடன் மால்வேர் உங்களுடைய போனுக்குள் நுழைந்து, தனிநபர் விவரங்களை திருடுவதற்கான அதன் வேலையை ஆரம்பித்துவிடும்.
டவுன்லோட் செய்யப்பட்ட ஃபைல்கள் உங்களுடைய போனில் வைரஸை ஆக்டிவேட் செய்து, அதனை தாக்க ஆரம்பித்து விடுகிறது. இந்த ஃபைல்கள் உங்களுடைய நெட் பேங்கிங் மற்றும் அப்ளிகேஷன் பாஸ்வேர்டுகள் போன்ற தனிநபர் விவரங்களை எடுத்துக் கொள்கிறது. சமீபத்தில் இந்த மோசடியில் சிக்கிய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் மோசடிக்காரரிடம் 4 லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.
இதையும் படிக்க:
மீடியாடெக், குவால்காம் சிப்செட்களுக்கு குட் பை…. சொந்த சிப்செட் தயாரிப்பில் சியோமி…!!
நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி?
இதற்கான சிம்பிளான வழி தெரியாத நம்பர்களில் இருந்துவரும் மெசேஜ்களை பிளாக் செய்வது. ஆனால் முக்கியமாக அதே நேரத்தில் உங்களுடைய போனில் தனிநபர் விவரங்களை நீங்கள் சேமித்து வைக்கும் வழியையும் மாற்ற வேண்டும். பாஸ்வேர்டுகளை சேமித்து வைப்பதற்கான சிறந்த வழி பாஸ்வேர்ட் மேனேஜர்கள். இது ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டிலுமே கிடைக்கிறது.
ஆப்பிள் போனில் உள்ள iOS 18 பயனர்களுக்கு பாஸ்வேர்ட் மேனேஜர் பயன்படுத்துவதற்கு கிடைக்கிறது. இதன் மூலம் யூசர்கள் பாஸ்வேர்டுகளை சேமிக்காமலேயே அவர்களுடைய டிஜிட்டல் அக்கவுண்ட்களை பயன்படுத்தலாம். இது ஆட்டோஃபில் பாஸ்வோர்ட் செட்டிங்ஸை அமைத்து பாஸ்வேர்ட்திருடப்படுவதை கடினமாக்குகிறது.
இதையும் படிக்க:
போலி ஐபோனை கண்டுபிடிப்பது இவ்வளவு ஈஸியா…? எப்படின்னு தெரிஞ்சுக்கலாமா…?
ஆனால் ஒருவேளை உங்களுடைய பாஸ்வேர்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டால், ஆப்பிள் உடனடியாக அதனை உங்களுக்கு தெரிவித்து, உங்களை எச்சரிக்கும். அந்த சமயத்தில் நீங்கள் உங்களுடைய பாஸ்வேர்டை உடனடியாக மாற்றிவிட வேண்டும். இந்த மாதிரியான பாஸ்வோர்ட்பிரச்சனைகளை முற்றிலுமாக தவிர்ப்பதற்கு பல்வேறு அக்கவுண்டுகளுக்கு பாஸ்கி அமைப்பதற்கான ஆப்ஷனை தற்போது வாட்ஸ்அப் வழங்குகிறது. இதன் மூலம் நீங்கள் பேஸ் ID அல்லது டச் ID மூலமாக உங்களுடைய அக்கவுண்ட்டை பாதுகாத்து லாக் செய்து கொள்ளலாம்.
.