ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக ஹாஸிம் சபிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் ராணுவம், நேற்று முதல் பெய்ரூட்டின் மத்திய பகுதியை குறிவைத்து குண்டு மழை பொழிந்து வருகிறது.
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா, முக்கிய தளபதிகளான நபில் கவுக், அலி கார்க்கி உள்ளிட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஹிஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக அந்த அமைப்பின் உயர்மட்ட கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், ஹிஸ்புல்லா இயக்கத்தின் அடுத்த தலைவராக ஹாஸிம் சபிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Also Read |
Donald Trump | கமலா ஹாரிஸ் மீது கடும் விமர்சனம் – டொனால்ட் டிரம்ப் பேச்சால் சர்ச்சை!
60 வயதான ஹாஸிம் சபிதீன், உயிரிழந்த நஸ்ருல்லாவின் உறவினர் ஆவார். ஹிஸ்புல்லா அமைப்பின் செயற்குழு தலைவரும், அமைப்பு எடுக்கும் அரசியல் முடிவுகளில் முக்கிய பங்கு வகிப்பவருமான ஹாஸிம் ஹிஸ்புல்லாவின் ராணுவ செயல்பாடுகளைத் தீர்மானிக்கும் ஜிகாத் கவுன்சிலிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மத்திய கிழக்கு நாடுகளில் முழுமையான போர் நிகழ்வது தடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் டெலாவர் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவுடன் பேச இருப்பதாகவும் கூறினார்.
.